ஹரியானாவில் 22,779 ஓட்டில் தான் தோற்றோம்.. வாக்கு திருட்டால் பறிபோன வெற்றி.. ராகுல் தந்த டேட்டா
டெல்லி: ‛‛ஹரியானா சட்டசபை தேர்தலில் நாங்கள் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம். ஆனால், ஹரியானாவில் ஓட்டு திருட்டு என்பது அதிகமாக நடந்துள்ளது. இதனால் ஓட்டு திருட்டு தான் எங்களின் வெற்றியை பறித்துவிட்டது'' என்று ராகுல் காந்தி கூறி அதற்கான டேட்டாவை வெளியிட்டார்.
டெல்லியில் இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மீது மீண்டும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். வழக்கம்போல் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

ஹரியானா மாநிலம் முழுவதும் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. இந்த ஓட்டு திருட்டு தொகுதி வாரியாக மட்டுமின்றி மாநிலம், நாடு முழுவதும் நடந்துள்ளதாக நாங்கள் சந்தேகித்தோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஹரியானாவில் காங்கிரஸ் வெல்லும் என்று கணித்தன. ஆனால் நடந்தது வேறு. ஹரியானா வரலாற்றில் முதல் முறையாக தபால் ஓட்டுகளில் வித்தியாசம் வந்துள்ளது. காங்கிரஸின் மகத்தான வெற்றியை ஓட்டு திருட்டு மூலம் தடுத்து விட்டனர்.
ஹரியானாவில் 2 பூத்களில் ஒரு வாக்காளரின் போட்டோ 223 இடங்களில் இருந்தது. மொத்தமாக பார்த்தால் ஹரியானாவில் 25 லட்சம் வாக்காளர்கள் போலியாக இருக்கலாம். இதில் 5,21,619 போலி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது 1,24,177 வாக்காளர்கள் ஒரே போட்டோவில் இருக்கின்றனர். பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்ததாக கூறப்படுகிறது. ஒரு வீட்டில் 500 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அங்கு சென்று சோதித்தபோது யாருமே இல்லை.
ஹரியானாவில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டன. இதில் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்கள். ஹரியானாவில் லோக்சபா தேர்தலில் பாஜக தோற்றபிறகு வாக்காளர்களை நீக்கி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர். ஹரியானாவில் நாங்கள் 22,779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்றோம். ஆனால் உண்மையில் அங்கு ஓட்டு திருட்டு என்பது அதனை விட அதிகமாக நடந்துள்ளது. இதனால் எங்களின் வெற்றியை ஹரியானாவில் ஓட்டு திருட்டு மூலமாக பறித்து விட்டனர்'' என்றார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஹரியானாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நயாப் சிங் சைனி உள்ளார். ஹரியானாவில் கடந்த 2024 அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கரிஸ் கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றியது. ஐஎன்எல்டி கட்சி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதில் காங்கிரஸ் - பாஜக இடையே 11 தொகுதிகள் வித்தியாசமாக இருந்தாலும் கூட இருகட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையிலான வித்தியாசம் நூலிழை தாான். அதாவது பாஜக 40 சதவீத ஓட்டுகள் பெற்று 48 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 30.09 சதவீத ஓட்டுகள் பெற்று 37 தொகுதிகளை வென்றது. அதனை தான் ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசி உள்ளார். ஹரியானாவில் ஓட்டு திருட்டு நடந்ததால் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications