புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை சரியான வாய்ப்பு என கொண்டாடிய அர்னாப்
டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம், தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு கிடைத்த சரியான வாய்ப்பாக கொண்டாடியிருகிறார் அர்னாப் கோஸ்வாமி.
Recommended Video
டிஆர்பி மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் பார்க் மாஜி சி.இ.ஓ. பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தேசத்தின் ராணுவ ரகசியங்கள் அத்தனையும் அறிந்து அதை சர்வசாதாரணமாக வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி.

காஷ்மீர் தாக்குதல்
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 2019 பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் 40 பேரை பலி கொண்ட இந்த தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்கனவே எழுப்பி இருந்தன. இது விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

நல்ல வாய்ப்பு
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததை பற்றி கவலைப்படாமல் தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பாக சுட்டிக்காட்டி பார்த்தோ தாஸ்குப்தாவுடன் வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறார் அர்னாப். This attack we have won like carzy என அதாவது இந்த வாய்ப்பு வெறிபிடித்து காத்திருந்தவர்களுக்கான வாய்ப்பு இந்த தாக்குதல் என்கிற தொனியில் அர்னாப் உரையாடி இருக்கிறார்.

ஒரே ஒரு சேனல்தான்
அத்துடன் புல்வாமா தாக்குதலின் போது இப்படியும் உரையாடி இருக்கிறார் அர்னாப்.. 20 நிமிடத்துக்கு முன்னர் காஷ்மீரில் மிகப் பெரிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரில் இந்த ஆண்டு நடந்த மிகப் பெரிய தாக்குதல்.. ஒரே ஒரு சேனல்தான் களத்தில் இருந்தது என குதூகலமாக அர்னாப் குறிப்பிட்டிருக்கிறார்.

தாக்குதலை தொடர்ந்து பில்டப்
மேலும் இந்த தாக்குதலை பயன்படுத்தி பில்டப் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். பிரதமர் மோடியின் உரையை பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்றும் அர்னாப் அந்த உரையாடலில் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications