சுதந்திரத்திற்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்கு சதவீதம்.. மேற்கு வங்கத்தில் 93% வாக்குகள் பதிவு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 93 சதவிகிதமாக உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு மேற்கு வங்கத்தில் பதிவான அதிகபட்ச வாக்குசதவீதம் இதுவேயாகும். வாக்குப்பதிவுகளில் புதிய வரலாறை மேற்கு வங்க வாக்காளர்கள் அம்மாநிலத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 23 ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 93.19 சதவிகித வாக்குகள் பதிவானது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்
இதுவரை இல்லாத அளவிற்கு மேற்கு வங்கத்தில் பதிவான வாக்கு சதவிகிதம் மேற்கு வங்க அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் வியப்பை அளித்தது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் மோதல், வன்முறையும் ஏற்பட்டது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த தேர்தலில் 92.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டு கட்ட வாக்குப்பதியையும் சேர்த்து கிட்டத்தட்ட 93 சதவீத வாக்குகள் (92.93) பதிவாகியுள்ளது. மேற்கு வங்க தேர்தல் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பிறகு பதிவான வாக்குகளில் அதிகபட்ச வாக்கு சதவீதம் இதுவேயாகும். நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்ட தேர்தலில் ஊரக பகுதிகளில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாஜகவே வெற்றி பெற வாய்ப்பு
புர்பா பர்த்மன் மாவட்டத்தில் 93.39 சதவீத வாக்குகளும், ஹூக்ளியில் 91.4 சதவீத வாக்குகளும், சவுத் 24 பர்ஹனாஸ் மாவட்டத்தில் 91.45 சதவீத வாக்குகளும், வடக்கு 24 பர்ஹனாஸ் மாவட்டத்தில் 91.39 சதவீத வாக்குகளும் மற்றும் நடியா மாவட்டத்தில் 91.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி வென்று ஆட்சியில் உள்ளார். இந்த முறையும் வெற்றி பெற்று 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பாரா? அல்லது பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானாவை மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களை பெறும் என்று கணித்துள்ளன.
6 எக்ஸிட் போல் முடிவுகள்
நேற்று வரை வெளியான 6 கருத்து கணிப்புகளில் 4 எக்ஸிட் போல்கள் பாஜக பெரும்பான்மையை தொடும் என்றும் 2 எக்ஸிட் போல்ஸ்கள் மம்தாவே மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளன. மக்களின் தீர்ப்பு என்ன என்பது வரும் 4 தேதி தெரிந்துவிடும். ஆனாலும் மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆருக்கு பிறகாக நடைபெற்ற முதல் தேர்தல் என்பதாலும் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கும் நிலையில், மக்களின் முடிவு என்ன என்பதை அறிய நாடே காத்திருக்கிறது. இந்த கேள்விகளுக்கு மே 4 விடை தெரிந்து விடும்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம்:
1951 - 43.12%
1957 - 47.64%
1962 - 55.55%
1967 - 66.10%
1969 - 66.51%
1971 - 62.03%
1972 - 60.82%
1977 - 56.15%
1982 - 76.96%
1987 - 75.66%
1991 - 76.80%
1996 - 82.94%
2001 - 75.29%
2006 - 81.58%
2011 - 84.72%
2016 - 83.02%
2021 - 82.30%
2026 - 92.93%
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications