மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் மம்தா சாம்ராஜ்யம்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக! P-MARQ எக்ஸிட் போல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு, பல்வேறு நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே 'மேட்ரைஸ்' கணிப்புகள் பாஜகவுக்குச் சாதகமாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'பி-மார்க்' (P-MARQ) நிறுவனத்தின் கணிப்புகள் மம்தா பானர்ஜிக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
மேற்கு வங்கத்தின் அரசியல் சதுரங்கம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 294 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. மே 4ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை என்றாலும், அதற்கு முன்னதாக வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள் மேற்கு வங்க அதிகார மையத்தில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது எனச் சொல்லலாம்.

அங்கு கடந்த 15 ஆண்டுகளாக மம்தா ஆட்சி தொடரும் நிலையில், அது இந்த முறை முடிவுக்கு வரக்கூடும் என சில கருத்துக் கணிப்புகள் சொல்கிறது. குறிப்பாக P-MARQ சர்வே அங்கு பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்தாலும் பெரும்பான்மைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான 148** என்ற மேஜிக் எண்ணை பாஜக அசால்ட்டாகத் தாண்டும் என்கிறது பி-மார்க்!
பாஜக (BJP): 150 - 175 இடங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் (TMC): 118 - 138 இடங்கள்
காங்கிரஸ் (Congress): 02 - 06 இடங்கள்
இந்தக் கணிப்புகள் உண்மையானால், 150 இடங்களுக்கு மேல் பிடித்து பாஜக முதன்முறையாக மேற்கு வங்கத்தில் அரியணையில் அமரும். அதே சமயம், 2021ல் 200க்கும் மேற்பட்ட இடங்களை வாரிச் சுருட்டிய மம்தா பானர்ஜிக்கு, இது மிகப்பெரிய சரிவாக அமையும். பி-மார்க் மற்றும் மேட்ரைஸ் என இரண்டு கணிப்புகளுமே பாஜக-வுக்கு ஆதரவாக வந்துள்ளன. ஒருவேளை மம்தா பானர்ஜி தோல்வியடைந்தால், அது திரிணாமுல் கட்சிக்கே மாபெரும் அதிர்ச்சியாகவே இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications