”2 கோடி வேலை என்னாச்சு மோடி?” - பாஜக எம்பி வருண் காந்தியின் வஞ்சப் புகழ்ச்சி - கட்சியினர் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவதுதானே நாம் கொடுத்த வாக்குறுதி என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்திரா காந்தியின் பேரனாக வருண் காந்தி பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

அதே நேரம் அண்மை காலங்களால மத்திய அரசு மற்றும் பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் பொதுவெளியில் தெரிவித்து வருகிறார்.

வருண் காந்தி வேண்டுகோள்

வருண் காந்தி வேண்டுகோள்

நேற்றைய தினம் ட்விட்டரில், "நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக வேலையில்லா திண்டாட்டம் இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக பேசி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திட வேண்டும். வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும். நாடு அப்போதுதான் வளம்பெறும்." என்று கருத்திட்டு இருந்தார்.

பிரதமர் அறிவிப்பு

பிரதமர் அறிவிப்பு

இந்த நிலையில், இன்று காலை ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், மத்திய அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை பாராட்டி பாஜகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 வரவேற்பும் விமர்சனமும்

வரவேற்பும் விமர்சனமும்

அதே சமயம் 2024 மக்களவைத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு இது என்று எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அது ஒருபுறம் இருக்க பாஜக எம்.பி. வருண் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்புக்காக நன்றி தெரிவிப்பதைபோல் ட்விட்டரில் அவரது தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார்.

2 கோடி வேலை வாய்ப்பு

2 கோடி வேலை வாய்ப்பு

அதில், "பிரதமருக்கு நன்றி. வேலையில்லாத இளைஞர்களின் வலி மற்றும் உணர்ச்சிகளை புரிந்து இருக்கிறீர்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் ஒரு கோடி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்க முடியும் என்ற நமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். இந்த இலக்கை அடைவதற்கு வேகமாக செயல்பட வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+