Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த 18 சீட்.." பாஜக கூட்டணிக்கும் இல்லை.. காங். கூட்டணிக்கும் இல்லை.. அப்போ வென்றது யார் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் இரு கூட்டணியிலும் இல்லாதவர்கள் சுமார் 18 இடங்களில் வென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டில் கடந்த 1.5 மாதங்களாக மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தன. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

லோக்சபா தேர்தல்: இதில் கடந்த இரு தேர்தல்களை போல பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 சீட்களை கடந்துவிட்ட போதிலும், பாஜக தனியாக 240 சீட்களில் மட்டுமே வென்றுள்ளன. அங்குக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட், ஜேடியு 12 சீட்களில் வென்றுள்ளன.

அதேபோல மறுபுறம் இந்தியா கூட்டணி 234 லோக்சபா தொகுதிகளை வென்றது. அதில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி 37 தொகுதிகள், திரிணாமுல் 29 தொகுதிகள், திமுக 22 தொகுதிகளில் வென்றுள்ளன. இது தவிர தாக்ரே சிவசேனா, சரத்பவார் என்சிபி, இடதுசாரிகளும் கணிசமான இடங்களில் வென்றுள்ளன.

அந்த 18 சீட்: தேசியளவில் பார்க்கும் போது இந்த என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அதேபோல இரு கூட்டணிகளும் தான் பெரும்பாலான சீட்களில் வென்றன. அதேநேரம் இந்த இரு கூட்டணிகளைத் தாண்டியும் சில கட்சிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதுபோல இரு கூட்டணியிலும் இல்லாதவர்கள் சுமார் 18 இடங்களில் வென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்த இரு கூட்டணிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் சுயேச்சைகள் தான் அதிக சீட்களில் வென்றுள்ளன. நாடு முழுக்க மொத்தம் 7 இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன. அதைத் தொடர்ந்து ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் வென்றன. கடந்த முறை ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை அது ஒரே ஒரு இடமாகச் சுருங்கி உள்ளது.

மற்ற கட்சிகள்: அதேபோல தெலுங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் மஜ்லீஸ் கட்சியின் ஓவைசி வென்றுள்ளார். கடந்த 1989 முதலே ஹைதராபாத் தொகுதி மஜ்லீஸ் கட்சி வசமே இருக்கிறது. 2004 முதல் ஓவைசி தான் இந்த தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இந்த முறையும் இரண்டு கூட்டணிகளிலும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட மஜ்லீஸ் கட்சி ஹைதராபாத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) உத்தரப் பிரதேசத்தில் நாகினா தொகுதியில் 1,51,473 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மேகாலயாவில் உள்ள Voice of the People Party என்ற கட்சி ஷில்லாங் தொகுதியில் வெற்றி பெற்றது. அண்டை மாநிலமான மிசோரமில், ஆளும் சோரம் மக்கள் இயக்கத்தின் (ZPM) அங்குள்ள ஒரே லோக்சபா தொகுதியில் வென்றது.

அதேபோல சிக்கிம் தொகுதியில் உள்ள ஒரே லோக்சபா தொகுதியை அங்குள்ள பிராந்திய கட்சியான எஸ்கேஎம் கைப்பற்றியது. இது தவிரப் பஞ்சாபில் உள்ள சிரோமணி அகாலி தளம், பாரத ஆதிவாசி கட்சி தலா ஒரு இடத்தில் வென்றுள்ளன

மொத்த விவரம்: அதாவது சுயேச்சைகள் 7 தொகுதிகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 3 வென்றுள்ளன. இது தவிர மஜ்லீஸ், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்), விபிபி சோரம் மக்கள் இயக்கம், எஸ்கேஎம், சிரோமணி அகாலி தளம், பாரத ஆதிவாசி கட்சி தலா ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளன. இப்படி என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மொத்தம் 18 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+