Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைம்ஸின் டாப் நிறுவனங்கள் லிஸ்ட்டில் 22 இந்திய கம்பெனிகள்.. அடித்து தூக்கும் அம்பானி & அதானி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புகழ்பெற்ற டைம்ஸ் நிறுவனம் உலகின் டாப் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 1000 நிறுவனங்களைக் கொண்ட இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 22 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் உலகளவில் இருக்கும் டாப் 1000 நிறுவனங்களின் லிஸ்டை வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

mukesh ambani adani world

டாப் நிறுவனங்கள்: பணியாளர்களின் திருப்தி, வருவாய் வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்ட்டை உருவாக்கியுள்ளனர். உலகெங்கும் சுமார் 1,70,000 பேரிடம் பணி செய்யும் சூழல், சம்பளம் என பல்வேறு கேள்விகளைக் கேட்டு இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளார். சுமார் 50 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2023ல் US$100 மில்லியன் வருவாயைத் தாண்டிய நிறுவனங்கள் மற்றும் 2021 முதல் 2023 வரை அதிக வளர்ச்சியை வெளிப்படுத்திய நிறுவனங்கள் இதில் மதிப்பீடு செய்யப்பட்டன.

டாப் இந்திய நிறுவனங்கள்: டைம்ஸ் நிறுவனத்தின் இந்த லிஸ்டில் மொத்தம் 1000 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து மட்டும் 22 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன இந்த லிஸ்டில் டாப் 100இல் எந்தவொரு இந்திய நிறுவனமும் இல்லை. அதிகபட்சமாக ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் 112வது இடத்தில் உள்ளது. இன்போசிஸ் மற்றும் விப்ரோ முறையே 119 மற்றும் 134வது இடத்தில் உள்ளன. அதேநேரம் அதானி நிறுவனம் 736வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனம் 646வது இடத்திலும் உள்ளது.

அதேபோல மஹிந்திரா குழுமம் 187வது இடம், லார்சன் & டப்ரோ 549வது இடம், ஐடிசி லிமிடெட் 586வது இடம் பிடித்துள்ளது. இது தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் 597வது இடத்தை பிடித்துள்ளன. மேலும், இந்த லிஸ்டில் பல வங்கிகளும் உள்ளன. அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி 504வது இடத்தில் உள்ள நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 518வது இடம், ஐசிஐசிஐ வங்கி 525வது இடத்திலும் உள்ளது. இது தவிர கோட்டக் மஹிந்திரா வங்கி 551 இடத்தில் உள்ள நிலையில், யெஸ் வங்கியும் 783வது இடத்தில் உள்ளன.

அதானி: இந்த மைஸ் பட்டியலில் அதானி குழுமம் இடம்பெற்றுள்ள நிலையில், இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ரேங்கிங்கிற்கு அதானி குழுமத்தில் உள்ள 11 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டன. மற்ற மூன்று நிறுவனங்களும் இந்த எட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் என்பதால் அவை தனியாகப் பரிசீலனை செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் லிமிடெட் உள்ளிட்டவை இதில் பரிசீலிக்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளன.

டாப் 10 நிறுவனங்கள்: சர்வதேச அளவில் பார்க்கும் போது இதில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து அக்சென்ச்சர் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் மூன்றாவது இடத்திலும் பிஎம்டபள்யு மற்றும் அமேசான் முறையே 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளன. எலெக்ட்ரிசைட் டி பிரான்ஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மெட்டா, சீமென்ஸ், ஜேபி மோர்கன்சேஸ் ஆகிய நிறுவனங்கள் 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+