"25 அடடே வசதிகள்.." வந்தே பாரத்தில் வரும் வேற லெவல் மாற்றம்! சென்னை- நெல்லை ரூட்டில் இருக்குமா
டெல்லி: ஏற்கனவே வந்தே பாரத் ரயில்களில் பல வசதிகள் கொட்டி கிடக்கும் நிலையில், அதில் மேலும் பல புதிய வசதிகளைக் கொண்டு வர இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்குப் பயணிகளிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏசி, தானியங்கி கதவுகள் என இதில் உள்ள அனைத்துமே பயணிகளை ஈர்ப்பதாக இருக்கிறது.
வந்தே பாரத்: இதற்கிடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் சவுகரியமாகப் பயணிக்க மேலும் 25 அட்டகாசமான வசதிகளைக் கொண்டு வர இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் சில வசதிகள் பயணிகள் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.. மேலும், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகள் இதில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்து சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதிலும் இந்த புதிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே-இன் நவீன மகத்தான சாதனைகளில் ஒன்றாக இந்த வந்தே பாரத் மாறியுள்ள நிலையில், இப்போது வரும் சின்ன சின்ன மாற்றங்களும் கூட பெரியளவில் கவனத்தை ஈர்ப்பதாகவே அமைந்துள்ளது.
புதிய வண்ணம்: இப்போது 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் ரயில் சர்வீஸ் இருக்கிறது. இதில் மேலும் புதிய வசதிகளைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையை (ஐசிஎஃப்) ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் பார்வையிட்டார். அப்போது தான் புதிய ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிற வந்தே பாரத் ரயில்களின் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது தான் அடுத்து வரும் வந்தே பாரத் ரயில்கள் 25 மேம்பாடுகளுடன் இருக்கும் என்று அவர் அறிவித்திருந்தார். வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் மேம்பாடுகளுடன் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
பயணத்தை மேலும் இனிமையாக்க ரயில் இருக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது
இருக்கையின் ரிக்லைன் reclining வசதி அதிகரிப்பு
கழிவறைகளில் தண்ணீர் தெறிப்பதைத் தவிர்க்க, வாஷ் பேசின் ஆழம் அதிகரிக்கப்படுகிறது
இருக்கை கீழ் இருக்கும் சார்ஜிங் போர்டை மேலும் எளிதாக அணுகும் வசதி
எக்ஸிகியூட்டிவ் சேர் சீட்களின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு (pleasant blue) மாற்றம்.
எக்ஸிகியூட்டிவ் சேர் சீட்களின் கால்களை வைக்கப் பயன்படும் பூட் ரெஸ்ட் (foot rest) மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள முதல் பெட்டியில் அவர்கள் எளிதாக உள்ளே சென்று வர கூடுதல் வசதி
கழிவறைகளில் வெளிச்சம் 1.5 வாட்டிலிருந்து 2.5 வாட்டாக மேம்படுத்தப்படுகிறது.
ரயில் பெட்டிகள் மேலே யாரும் ஏறாமல் இருக்க ஆண்டி-கிளைம்பிங் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
பெட்டிகளில் ஏர் கண்டிஷனிங்கை மேலும் சிறப்பானதாக ஆக்க நடவடிக்கை
பயணிகள் நேரத்தைக் கழிக்கப் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரைகள்
தீயை எளிதாகக் கண்டறியவும், அவை பரவாமல் தடுக்கவும் பெட்டிகளில் சிறப்பான தீ கண்டறிதல் அமைப்பு
கண்ணாடிகளின் transparency மேம்படுத்தப்பட்டுள்ளது.
குழாயில் வரும் நீரைத் துல்லியமாகக் கட்டுப்படுத்தும் வசதி
எக்ஸிகியூட்டிவ் சீட்டில் அனைத்து சீட்களிலும் செய்தித்தாள் வைக்கப்படும்
டாய்லெட்டில் மேம்படுத்தப்பட்ட கைபிடி வசதி
ஒரே மாதிரியான வண்ணங்களைக் கொண்ட கழிப்பறை பேனல்கள்
அவசரக் காலங்களில் டிரைவரை தொடர்பு கொள்ள இருக்கும் எமர்ஜென்சி காலிங் வசதியை எளிதாக அணுகும் வசதி
மேலே வைக்கப்படும் லக்கேஜ் காரணமாக ஏர் கூலிங் பாதிக்கமால் இருக்க சிறப்பு நடவடிக்கை
அழகியலை மேம்படுத்த FRP பேனல்களில் சிறப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது
எளிமையான பராமரிப்பு பணிகளுக்காக ரயில் பெட்டிகளில் குறிப்பிட தகுந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி காலத்தில் வாகனத்தை நிறுத்த எளிமையான புஷ் பட்டன் வசதி
பெட்டிகளில் மேலே இருக்கும் டிரிம் பேனல் அழகியல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பெட்டிகளில் இருக்கும் ஏசி வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது
அவசரக் காலங்களில் தீயை அணைக்க பயன்படும் கருவிகளுக்கு ஈஸியாக அணுகத் தேவையான வசதிகள் ஆகியவை ரயில்களில் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications