அகவிலைப்படி முதல் ஆதார் வரை! செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிகழும் 6 மேஜர் மாற்றங்கள்!
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான மாற்றங்கள் நிகழலாம் என சொல்லப்படுகிறது. இதை எல்லாம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும 6 நாட்கள்தான் இருக்கின்றன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம்.

இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது போல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அது போல் இரண்டாவது மாற்றமாக விமான எரிபொருளின் விலைகளையும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
போலி அழைப்புகள், போலி செய்திகள் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடுமையான வழிகாட்டுதலை டிராய் வெளியிட்டுள்ளது. அதன் படி பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் எச்டிஎஃப்சி வங்கி பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஜூன் 14 ஆம் தேதி வரை புதுப்பிக்கும் கட்டணம் இருந்த நிலையில் அது செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3 சதவீதம் உயர்த்தினால் அது 53 சதவீதமாக உயரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications