அயோத்தியில் பிரதமர் பேச்சில் இதை கவனீச்சீங்களா.. ராமாயணத்திற்கும் மோடி பேச்சுக்கும் உள்ள தொடர்பு
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது உரையில் சில ராமாயண கதாபாத்திரங்கள் குறிப்பிட்டார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
அயோத்தியில் ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், அந்த சடங்குகள் முடிந்தவுடன் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது வால்மீகியின் ராமாயணத்தின் பல கதாபாத்திரங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்ட கேரக்டர்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
சபரி: ராமாயணத்தில் சபரி என்று பழங்குடியினத்தை சேர்ந்த இளவரசி கதாபாத்திரம் வரும். இந்த சபரி ஆன்மிகத்தைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய நபர். தனக்கான குருவைத் தேடி சபரி பல இடங்களுக்கு அலைந்து திரிந்த நிலையில், மாதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்ததும் அந்த தேடலை முடித்துக் கொண்டார். அங்கேயே சபரி பல ஆண்டுகள் இருந்தார். ஒரு கட்டத்தில் முனிவருக்கு வயதாகி அவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அப்போது அந்த முனிவர், ராமர் ஒரு நாள் இங்கே வந்து ஆசீர்வதிப்பார் என்று கூறிவிட்டு உயிரிழந்தார். அப்படியே பல ஆண்டுகள் ஓடின.
பின்னர் ஒரு நாள் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தியில் இருந்து வனவாசம் வந்த போது இங்கு வந்து தங்கினர். அவர்களுக்குச் சபரி பழங்களைக் கொடுத்தார். பின்னர் சபரியை ராமர் ஆசீர்வதித்தார். சபரி குறித்து பிரதமர் மோடி, "நமது பழங்குடியின தாய் சபரியை நினைக்கும் போது, அவரது அளவிட முடியாத நம்பிக்கை தான் அனைவருக்கும் நினைவில் வரும்.. ராமர் வருவார் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்து காத்திருந்தார். இந்த நம்பிக்கை தான் இந்தியாவை உருவாக்குகிறது" என்றார்.
நிஷாத் கிங் குஹ்: கங்கைக் கரையில் உள்ள ஒரு பழங்குடி அரசராக இருந்தவர் நிஷாத் கிங் குஹ்.. ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் அயோத்தியை விட்டு வெளியேறி தனது ராஜ்ஜியத்தை அடைந்தபோது, அவர்கள் நதியைக் கடக்க உதவியது நிஷாத மன்னன். மேலும், ராமரின் சகோதரரான பாரதன் ராமனைத் தேடி வந்த போது எங்குப் பாரதன் ராமனைத் தாக்குவாரோ என்று நினைத்த நிஷாத் மன்னன் பாரதனையும் எதிர்க்கத் துணிந்தான்.
ஆனால், பரதன் தனது சகோதரனைத் தேடி வந்துள்ளார் என்பது புரிந்து கொண்டு பரதனை வரவேற்றார். 14 வருட வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்கு ராமர் திரும்பும் போது, தனது நண்பரான நிஷாத மன்னனை மறக்காமல் சந்தித்து வந்தார். அவரையும் நிஷாத் கிங் குஹ்
அணில்: ராமாயணத்தில் வரும் அணில் கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.. இலங்கையை அடையக் கடலின் குறுக்கே அனுமன் உள்ளிட்ட கூட்டங்கள் பாலம் கட்டும் போது, அணிலும் அவர்களுக்கு உதவியது. அப்போதுதான் ராமர் அணிலைத் தூக்கி வந்து முதுகில் தடவிக் கொடுத்தார். அணிலின் முதுகில் உள்ள கோடுகளுக்கு இதுதான் காரணம் என்று சொல்வார்கள். இந்த அணிலையும் பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் மிகவும் சாதாரணமானவன் என்று நினைப்பவர்கள் அணிலின் பங்களிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும். இது போன்ற தயக்கங்களை நீக்கி, சிறியதோ, பெரியதோ, ஒவ்வொரு முயற்சிக்கும் பிரதிபலன் கிடைக்கும். ஒவ்வொருவரின் முயற்சியே அதற்கு அடித்தளமாக அமையும். அதுதான் இந்தியா" என்றார்.
ஜடாயு: சீதையை ராவணன் இலங்கைக்குக் கடத்தி செல்லும் போது ராட்சதப் பறவையான ஜடாயு சீதையை மீட்க முயன்றது. இருப்பினும், ஜடாயுவை ராவணன் தாக்கியுள்ளார். இதனால் ஜடாயு படுகாயமடைந்தது. இருப்பினும், உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்த ஜடாயு, ராவணன் தெற்கு நோக்கிச் சென்றதாகச் சொல்லி உயிரிழந்தது. அதற்குப் பிறகு ஜடாயுவுக்கு பகவான் ராமர் தான் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "இலங்கை மன்னன் ராவணன் மிகவும் அறிவாளி, அதீத சக்தி வாய்ந்தவன். ஆனால் ஜடாயுவின் அர்ப்பணிப்பைப் பாருங்கள். ராவணனுடன் போரிட்டார். ராவணனை வெல்ல முடியாது என்று அறிந்திருந்தும் போரிட்டார். இந்தக் கடமை உணர்வின் உச்சம்தான் திறமையான மற்றும் மகத்தான இந்தியாவின் அஸ்திவாரம்" என்று அவர் தெரிவித்தார்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications