Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீ பிடிக்குமா? மறந்தும் கூட டீயுடன் சேர்த்து இதை சாப்பிடாதீங்க.. மோசமான உடல்நல பிரச்சினை ஏற்படும்

டீ சாப்பிடும் போது சில குறிப்பிட்ட வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டீ குடிப்பது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்பது உண்மை தான். ஆனாலும் கூட டீ சாப்பிடும் போது சில குறிப்பிட்ட வகையான உணவுகளைச் சாப்பிட்டால் மோசமான மருத்துவ பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குப் பலருக்கும் காலையில் டீ குடித்தால் தான் தங்கள் நாளே தொடங்கும். இங்கு யாருக்குத் தான் டீ பிடிக்காது.. காலை எழுந்தவுடன் சூடாக டீயை குடிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இப்போதும் இருந்து வருகிறது.

உணவுக்குக் கஷ்டம் இருக்கும் பல பேட்சுலர்களுக்கு டீ மட்டுமே பல நேரங்களில் உணவாகவே இருந்துள்ளது. இப்படி பலரது ஃபேவரைட்டா இருக்கும் டீயுடன் குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டீ பிடிக்குமா

டீ பிடிக்குமா

பொதுவாக நீண்ட அதிக வேலை இருக்கும் நாளுக்குப் பிறகு சூடாக நல்ல ஒரு டீயை போட வேண்டும் என்பதே நாம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு டிரிங்காக தேநீர் இருக்கிறது. பிஸ்கட், சாண்ட்விச், பக்கோடாக்கள், சமோசா மற்றும் கச்சோரி என எந்த வகையான ஸ்னாக்ஸ்களும் டீயுடன் இணைந்தால் அதன் சுவை அதிகரித்தது போல நமக்குத் தோன்றும். மாலை நேரங்களில் டீக்கடைகளில் கூட்டம் அதிகம் இருப்பதை நாம் கவனித்திருப்போம்.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

அதன் வேற லெவல் சுவையைத் தவிர, தேநீரில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. இருப்பினும், டீயுடன் சில குறிப்பிட்ட வகையிலான ஸ்நாக்ஸை சாப்பிடும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அது மோசமான உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல வகையான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கீரை, தானியங்கள்,

கீரை, தானியங்கள்,

கீரை, தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேநீருடன் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளன. இவை மேலே சொல்லப்பட்ட உணவுகளில் இருந்து இரும்புச்சத்து உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் கீரை, தானியங்கள் சாப்பிட்டும் உங்களுக்கு இரும்புச்சத்து கிடைக்காமல் போகலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

சிட்ரஸ் இருக்கும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.. இது உடலுக்கு மிகவும் நன்மை தரும். இருப்பினும், இதைப் பால் கலந்த தேநீருடன் (லெமன் டீ இல்லை) சேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. டீ மற்றும் எலுமிச்சையை எடுத்துக் கொள்வது உங்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். ஏப்பம், அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், காலை நேரங்களில் லெமன் டீ கூட தவிர்க்கலாம். மேலும் உங்களுக்கு ஏற்கனவே அசிடிட்டி பாதிப்பு இருந்தால், இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பஜ்ஜி

பஜ்ஜி

பஜ்ஜியும் டீயும் இங்கு பலருக்கும் பிடித்த ஒரு உணவாகவே உள்ளது.. ஆனால் மொறுமொறுப்பான, சுவையான பஜ்ஜி மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். பஜ்ஜி, போண்டா, பக்காடோ போன்ற பல ஸ்னாக்ஸ்கள் கடலை மாவில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலும் ஏற்படும் ஆபத்து உள்ளது.

சில் உணவுகள்

சில் உணவுகள்

குளிர்ந்த உணவுகளான ஐஸ்கிரீம் போன்றவை நிச்சயம் டீயுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சூடான டீயுடன் குளிர்ந்த உணவுகளை உட்கொள்வது செரிமான செயல்முறையைப் பலவீனப்படுத்தி, குமட்டல் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். சூடான தேநீர் குடித்த பிறகு குறைந்தது 30-45 நிமிடங்களுக்குக் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடக் கூடாது என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாக உள்ளது. மஞ்சள் சிறந்த மசாலாப் பொருளாகவும் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒன்றாகவும் உள்ளது. இருப்பினும், அதைத் தேநீருடன் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல. தேநீருடன் மஞ்சள் அதிகம் இருக்கும் உணவை எடுத்துக் கொள்வது கடுமையான அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது,

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்க்கடலை போன்றவை நமக்கு வலிமையையும் ஊட்டச்சத்தையும் அளிக்க உணவு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதையும் டீயுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. வேர்க்கடலை மட்டுமின்றி முந்திரி, பாதம், பிஸ்தா என எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் இருக்கும் இரும்புச்சத்து தேநீருடன் இணைந்தால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+