"ஆபத்து.." இந்த பாஸ்வோர்ட் இருந்தால் ஹேக் பண்ணிடுவாங்க! உடனே மாற்றுங்கள் மக்களே! வெளியான பரபர லிஸ்ட்
டெல்லி: இணையத்தில் நாம் பொதுவாக அதிகம் என்ன மாதிரியான பாஸ்வோர்ட்களை பயன்படுத்துகிறோம் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் உள்ள பாஸ்வோர்டை பயன்படுத்துவோர் உடனடியாக அதை மாற்றிக் கொள்ளவும்.
இந்த நவீன காலகட்டத்தில் நாம் இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இணையத்தில் ஒவ்வொரு இணையதளத்திற்கும் நாம் தனித்தனியாக பாஸ்வேர்ட்களை பயன்படுத்த வேண்டும்.

பாஸ்வோர்ட்: இதற்கிடையே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. பாஸ்வோர்ட் மேலாண்மை நிறுவனமான நோர்டபஸ் என்ற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் வழக்கமான பாஸ்வேர்ட்களை வைக்கக் கூடாது.. அதை மிக எளிதாக ஹேக் செய்துவிடுவார்கள் என்பதால் முடிந்தவரைத் தனித்துவமான பால்வேர்ட்டை வைக்க வேண்டும் என்றே வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இருப்பினும், பொதுமக்கள் அதையெல்லாம் பெரிதாகக் கேட்பதாகத் தெரியவில்லை. அந்த நோர்டபஸ் வெளியிட்ட லிஸ்டும் கூட அதையே தான் காட்டுகிறது. இந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி மிகவும் பொதுவான பாஸ்வேர்ட்டாக 123456 என்பது இருந்துள்ளது. மேலும், இடத்தின் அடிப்படையில் பாஸ்வேர்ட் வைக்கும் முறையும் அதிகமாகவே இருக்கிறது. நமது நாட்டில் அப்படி 'இந்தியா@123' என்ற பாஸ்வேர்ட் அதிகமாக வைக்கப்படுகிறது.
பொதுவான பாஸ்வேர்ட்கள்: இப்போது பல்வேறு ஸ்ட்ரீமிங் வெப்சைட்கள் வந்துவிட்ட நிலையில், அந்த ஸ்ட்ரீமிங் வெப்சைட்களுக்கு தான் பொதுமக்கள் பலவீனமான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல "admin" என்ற பாஸ்வோர்டும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி இந்த ஆண்டின் மிகவும் பொதுவான பாஸ்வோர்களில் ஒன்றாக இது இருக்கிறது.
கடந்த ஆண்டு உலகளாவிய password என்ற வார்த்தைதான் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாக இருந்தது. இந்தாண்டும் கூட password டாப் லிஸ்டில் இருக்கிறது. பாஸ்வேர்டு என்ற வார்த்தை மட்டுமின்றி, , 'Pass@123', 'Password@123' ஆகியவையும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
விரிவான ஆய்வு: பொதுமக்கள் வெவ்வேறு தளங்களில் என்ன பாஸ்வோர்ட்களை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய சுமார் 6.6 TB தரவுகளை ஆய்வு செய்து இந்த லிஸ்டை நோர்டபஸ் தளம் இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளது. இதுபோல பலவீனமான பாஸ்வேர்ட்டை வைத்தால் அதை வைத்து ஈஸியாக ஹேக் செய்ய முடியும். இது இணையப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "இந்த பாஸ்வேர்ட்களை எளிதாக ஹேக் செய்ய முடியும். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் உங்கள் கம்யூட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதே உங்களுக்குத் தெரியாது. அப்போது நீங்கள் மற்ற தளங்களைப் பயன்படுத்தும் போது அந்த பாஸ்வேர்டும் அவர்கள் கைகளுக்குச் செல்லும். எனவே, கவனமாக இணையத்தைப் பயன்படுத்துங்கள். வலிமையான பாஸ்வேர்ட்டை வைக்கவும். தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்" என்றனர்.
வெறும் எண்கள்: சர்வதேச அளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளில் சுமார் 31% வெறும் நம்பராகவே இருக்கிறது. '123456789', '12345', '000000' உள்ளிட்ட எண்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்டாக இருக்கிறது. உலகளவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களில் சுமார் 70 சதவிகிதத்தை ஒரே நொடியில் ஹேக் செய்ய முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பாஸ்வோர்ட்களை எளிதாக ஹேக் செய்யலாம் என்ற சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலாக பென்டிரைவ் போல இருக்கும் பாஸ்கீக்களை பயன்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications