உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள்.. அடித்து தூக்கும் தமிழக கல்வி நிறுவனங்கள்.. அண்ணா பல்கலை. எந்த இடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்ற கல்வி நிறுவனம் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ள நிலையில், இதில் தமிழகத்தில் இருந்து பல கல்வி நிறுவனங்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்ற அமைப்பு உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

What are the Indian universities in QS Rankings By Subject 2024

அதன்படி இந்த அமைப்பு இந்தாண்டிற்கான பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து, பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்கள்: வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான ரேங்கிங்கில் அகமதாபாத், பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள IIMகள் டாப் 50 இடங்களில் வந்துள்ளது. டெவலப்மெண்ட் படிப்புகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 20வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ரேங்கிங்கில் ஐந்து முக்கிய பாடப்பிரிவுகளில் சிறந்த நிறுவனங்கள் எவை என்பது குறித்து லிஸ்ட் வெளியிடப்படும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், லைஃப் சயின்ஸ் மற்றும் மருத்துவம், கலை, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை ஆகிய முக்கிய பிரிவுகளில் பல்கலைக்கழகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பொறியியல்: இதில் பொறியியல் & தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பிரிவுகளில் அதிகபட்சமாக 15 இந்திய நிறுவனங்கள் இந்த ரேங்கில் உள்ளன. பொறியியல் பிரிவில் ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மும்பை 45ஆவது இடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து சென்னை ஐஐடி சர்வதேச ரேங்கில் 77ஆவது இடத்தில் இருக்கிறது. ஐஐடி காரக்பூர் (85), ஐஐடி கான்பூர் (93) ஆகியவை டாப் 100 இடங்களில் வருகிறது.

தமிழக கல்வி நிறுவனங்கள்: இதில் தமிழ்நாட்டில் இருந்தும் 4 பல்கலைக்கழகங்கள் லிஸ்டில் இருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல ஐஐடி சென்னை 77ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், விஐடி 212ஆவது இடத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் 249ஆவது இடத்திலும் இருக்கிறது. தொடர்ந்து எஸ்ஆர்ம் பல்கலைக்கழகம் 368ஆவது இடத்தில் இருக்கிறது.

அறிவியல் துறையில் டாப் 100இல் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகமும் வரவில்லை. இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூர் 137ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், ஐஐடி மும்பை 147ஆவது இடத்திலும் ஐஐடி டெல்லி 183ஆவது இடத்திலும் உள்ளன. தமிழக பல்கலைக்கழகங்களில் ஐஐடி மெட்ராஸ் (206), விஐடி, அண்ணா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் ஆகியவை இந்த லிஸ்டில் உள்ளன.

எம்பிஏ படிப்புகள்: அதேபோல மேலாண்மை படிப்புகளில் இந்தியாவில் இருந்து 13 கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதிகபட்சமாக டெல்லி ஐஐடி 108ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், ஐஐஎம் அகமதாபாத் 131ஆவது இடத்திலும் ஐஐடி பம்பாய் 132ஆவது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து சென்னை ஐஐடி மட்டும் லிஸ்டில் இருக்கிறது. சென்னை ஐஐடி 292ஆவது இடத்தில் இருக்கிறது.

இதில் கலை துறையில் இருந்து 6 இந்திய கல்வி நிறுவனங்களும் லைஃப் சயின்ஸ் மற்றும் மருத்துவ துறையில் இருந்து 5 இந்திய கல்வி நிறுவனங்களும் உள்ளன. அதில் டெல்லி பல்கலைக்கழகம் (210), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (244) ஆகியவை டாப் 250ஆவது இடங்களில் வந்துள்ளன. தமிழகத்தில் இருந்து சென்னை ஐஐடி லிஸ்டில் உள்ளன.

மருத்துவம்: மருத்துவ பிரிவில் எய்மஸ் 249ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் 317ஆவது இடத்திலும் டெல்லி பல்கலைக்கழகம் 379ஆவது இடத்திலும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+