இதோ.. இதுதான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சொன்ன முக்கிய வழக்குகள்
டெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வாரம் இந்த வழக்குகளைத்தான் விசாரிக்கப் போகிறார்.
இந்திய தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்குப் பின்னால் மிகப் பெரிய சக்தி இருப்பதாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார். மேலும் தான் இந்த வாரம் சில முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்கவுள்ள பின்னணியில் புகார் கிளம்பியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிலையில், இந்த வாரம் விசாரிக்க உள்ள வழக்குகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி கோகோய் கூறியபடி இந்த வாரம் அவர் விசாரிக்க உள்ள வழக்குகள் இவைதான்:
இன்று இந்த வாரத்திற்கான நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் ராகுல் காந்தி சார்பில் மோடி குறித்து ராகுல் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கு நாளை விசாரிக்கப் பட உள்ளது. இந்த வழக்கை பாஜகவின் மக்களவை உறுப்பினர் மீனாக்ஷி லேகி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
தேர்தல் காலம் என்பதால் பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. தேர்தல் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரிக்க உள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தலை மையப்படுத்தி மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்கப்படுகிறது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இந்த வாரம் ரஞ்சன் கோகாய் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
அதோடு பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடுக்கப்பட்ட பொது நல வழக்குகளின் முக்கிய முடிவுகளும் இந்த வாரத்தில் எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications