Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சான்ஸே இல்லை".. எடப்பாடி வீசிய 10 அஸ்திரங்கள்.. பொதுக்குழு வழக்கில் வென்றது எப்படி? இதுதான் காரணம்

பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு சட்ட ரீதியாக சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது. அது இந்த வழக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது . அதிமுகவில் கடந்த மே மாதத்தில் இருந்து நடந்து வரும் மோதலுக்கு இன்று தீர்வு கிடைத்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தற்காலிகமாக சின்னம் கிடைத்து உள்ளது. ஆனால் அது இடைக்கால தீர்ப்புதான். தற்போது வந்தது பொதுக்குழு தீர்ப்பு. இதுவே கிளைமேக்ஸ். இதுவும் அவருக்கு சாதகமாக வந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.

அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

எதிர் வழக்கு

எதிர் வழக்கு

இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து வழக்கு கடந்த இரண்டு மாதம் பல்வேறு இடைவெளிக்கு இடையில் நடைபெற்றது. முதலில் வேறு இரண்டு நீதிபதிகள் இருக்க அதன்பின் வழக்கு வேறு இரண்டு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது. இந்த வாதங்கள் வழக்கிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி வைத்த வாதங்கள்

எடப்பாடி வைத்த வாதங்கள்

இந்த வழக்கில் எடப்பாடி வைத்த வாதங்கள் பின்வருமாறு

1. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.

2. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர்.

3. பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

மெஜாரிட்டி யாருக்கு உள்ளது?

மெஜாரிட்டி யாருக்கு உள்ளது?

4. பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.

5. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அந்த ஒப்புதல் இல்லை. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் நலனை கருதி ஒற்றை தலைமை கொண்டு வருவது எப்படி தவறாகும். கட்சியின் நலனுக்கு தேவை என்றால் அதைதானே செய்ய வேண்டும்.

6. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர்.

யாருக்கு அதிக அதிகாரம்

யாருக்கு அதிக அதிகாரம்

7.இடைக்கால பொதுச்செயலாளர் தவறு என்றால்.. ஒருங்கிணைப்பாளர்.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி சரியாகும். பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் இருப்பதே தானே சரியாக இருக்கும். அதனால் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்க பொதுக்குழுவில் முடிவு செய்தோம்.

8. ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு ஜூன் 23ம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அவர்தான் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி விதிகளை மீறினார். பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்துள்ளது.

தேர்வு செய்யும் உரிமை

தேர்வு செய்யும் உரிமை

9. கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் 1ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அதனால் பொதுக்குழு செல்லும் என்று வாதம் வைத்தனர்.

10. பொதுக்குழுதான் தற்போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி உள்ளது. பொதுக்குழுதான் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளிக்க முடியும். அதே பொதுக்குழுதான் அவரை நீக்கவும் முடியும். அப்படி இருக்கும் போது இதை மட்டும் ஓ பன்னீர்செல்வம் எப்படி எதிர்க்கலாம், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+