முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி.. எப்படி தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
முகத்தைப் பொழிவுடன் சுருக்கங்கள் இல்லாமல் வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்.
டெல்லி: இந்த மாசு நிறைந்த உலகில் நமது தோல் மிக எளிதாக மாசடைந்து விடுகிறது. இருப்பினும், சில எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும், முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.
இங்கு யாராலும் முதுமை அடைவதில் இருந்து தப்பிக்கவே முடியாது.. ஒருவர் வயதாக வயதாக அவர்களின் உடல் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.. இந்த மாற்றங்கள் அனைத்தும் முதலில் ஒருவரின் முகத்தில் தான் தெரியும்.
மேலும், நமது முகமே நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். இதனால் நாம் நமது முகத்தைப் பராமரிக்க வேண்டியது ரொம்பவே முக்கியமாகும்.. முகத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் அதற்குச் செய்ய வேண்டிய ஈஸியான காரியங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

முகம்
நமது உடலில் எதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம் முகத்தில் தான் பிரதிபலிக்கும்.. இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் மக்கள் வேகமாக வயதாகிறார்கள். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, காசு உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்பில் இருந்து முழுமையாகத் தப்பிக்க முடியவில்லை என்றாலும் கூட நாம் ஓரளவுக்குத் தற்காத்துக் கொள்ளலாம்.. குறிப்பாக 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இந்த ஈஸியான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.. எப்போதும் இளமையாகவே இருக்கலாம்.

30 வயது
30 வயதாகும்போது, நமது உடல் மற்றும் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். ரசாயனம் நிறைந்த அழகுசாதன பொருட்கள், காற்று மாசு ஆகியவை நமது தோல் மேலும் மோசமாவதற்கு வழிவகுக்கிறது.. நமது தோல் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கக்கூடும்..இதுவே பலருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலானோருக்கு முதலில் கண்களைச் சுற்றியே கோடுகளை ஏற்படத் தொடங்கும்.

பெண்கள்
சில நேரங்களில் டீன் ஏஜ் வயதிற்குப் பிறகும் மீண்டும் முகப்பரு ஏற்படும்.. இதை 'adult acne' என்று அழைப்பார்கள். ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது ஏற்படுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளுக்கு ஹார்மோன்கள் தான் முக்கிய காரணமாகும். பெரும்பாலான ஹார்மோன் மாற்றங்கள் 30 வயதில் தொடங்குகின்றன. பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும் போது, முடி உதிர்தல், தோல் சுருக்கம் ஏற்படும். 18 வயதில் 900 என்று இருக்கும் வளர்ச்சி ஹார்மோன் நாம் 30ஐ அடையும் நேரத்தில், 200ஆகக் குறைவதே இதற்குக் காரணம்.

ஆண்கள்
பெண்களைப் போல ஆண்களுக்கு அதிகளவில் தோல் பிரச்சினைகள் ஏற்படாது.. இருப்பினும், டெஸ்டோஸ்டிரோன் மாற்றம் ஆண்களின் தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். குடிப்பழக்கம், புகைபிடித்தல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, முறையாகச் சாப்பிடாமல் இருப்பது ஆண்கள் மத்தியில் தோல் பிரச்சினையை ஏற்படுத்தும். பருவகால பழங்கள், நட்ஸ் சாப்பிடுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் தோலைப் பாதுகாக்க உதவும்.

முகத்தைச் சுத்தமாக வைத்திருங்கள்
ஒவ்வொரு நாளும் காலையில் முகத்தைக் கழுவுங்கள்.. அதேபோல தூங்கும் முன்பு, அனைத்து மேக்அப்களையும் அகற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை முகத்தைக் கழுவுங்கள்.. இது நமது தோல் பாதுகாப்பு செயல்பாடுகளைச் செய்ய அனுமதிக்கிறது... தோலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவர் சொல்லும் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.. யாரோ சொல்கிறார்கள் என்பதற்காகத் தரமற்ற க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.

சன் ஸ்க்ரீன்
இரவு நேரத்தில் நமது தோல் புதுப்பிக்கும். எனவே, தூங்கும் முன்பு இறந்த சருமத்தை அகற்ற முகத்தை நன்கு கழுவுங்கள்.. இறந்த தோலை அகற்ற Exfoliate கூடச் செய்யலாம்.. வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டியது இருந்தால் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சூரிய கதிர்களில் இருந்து நம்மைக் காக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.. ஆன்டி-ஆக்ஸிடன்ட் சீரம் அல்லது வைட்டமின் சி சீரம் கூட பயன்படுத்தலாம்.

தண்ணீர் குடியுங்கள்.
குளிக்கும் போது எப்போதும் முகத்திற்குச் சூடான நீரை பயன்படுத்தாதீர்கள்.. வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.. சருமத்தில் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.. நமது உடலில் போதுமான நீர் எப்போதும் இருக்க வேண்டும்.. அடிக்கடி தண்ணீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆரோக்கியமான மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். மன அழுத்தத்தைக் குறையுங்கள். தேவையில்லாத விஷயங்களில் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும். இது செய்தாலே போதும்
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications