"இந்தியாவில் கம்மி" உலகிலேயே அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகள் எவை.. முதலிடம் இருக்கும் நாடு ஷாக் தான்
டெல்லி: மிடில் கிளாஸ் மக்களில் பலரும் வருமான வரி அதிகம் செலுத்த வேண்டி இருப்பதாகப் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். இவ்வளவு தொகை வரியாகச் செலுத்த வேண்டுமா என நீங்கள் நொந்துபோய் இருக்கலாம். ஆனால், உண்மையில் அதிக வரி செலுத்தும் நாடுகளில் நாம் டாப் 10க்குள் கூட இல்லை. உலகில் அதிக வரி வசூலிக்கும் டாப் 10 நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கலாகும் போது வருமான வரி குறித்தே மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு இருக்கும். உலகிலேயே அதிக வரி நாம் தான் செலுத்துகிறோம் என்று கூட பலரும் நினைத்திருக்கலாம்.

ஆனால், இந்தியாவில் அதிகபட்ச வருமான வரி என்பது 39%ஆக மட்டுமே இருக்கிறது. இதுவும் கூட மிக அதிக வருமானத்தைக் கொண்டவர்களுக்குத் தான். உண்மையில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் நாம் டாப் 10 இடங்களில் கூட வர மாட்டோம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெல்ஜியம்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் அதிக வருவாய் கொண்டவர்கள் தங்கள் வருமானத்தில் சுமார் 50% தொகையை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். வரி அதிகம் என்றாலும் சுகாதாரம் மற்றும் கல்வி என பெல்ஜியம் அரசு பல திட்டங்களை மக்களுக்கு அளிக்கிறது. இது தவிரப் பல பொருட்களுக்கு பெல்ஜியம் 21% வரை VAT வரி விதிக்கிறது. இதுவும் பெல்ஜியம் அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அருபா இதில் 9வது இடத்தில் உள்ளது. அங்குத் தனிநபர் வருமான வரி 52%ஆக உள்ளது. இந்த அரசும் மக்கள் நலனில் பல திட்டங்களை வழங்குகிறது. வருமான வரி தவிர பிஸ்னஸ் செய்வோருக்குத் தனியாக 3% டர்ன் ஓவர் வரியும் விதிக்கப்படுகிறது.
ஸ்வீடன்: ஸ்வீடன் நாட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் 52.3% வரை செல்லும். இருப்பினும், இங்கு மருத்துவம் மற்றும் கல்வி எனப் பல சேவைகள் இலவசம். ஸ்வீடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி மட்டுமின்றி 25% VAT வரியும் வசூலிக்கப்படுகிறது. உலகிலேயே அதிகபட்ச VAT வரி கொண்ட நாடாக ஸ்வீடன் இருக்கிறது.
5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியா நாட்டில் வருமான வரி 55% வரை செல்லும். இது தவிர 20% வால்யூ ஆடெட் டாக்ஸ் விதிக்கப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் அதிகம் வழங்கும் ஆஸ்திரியா வாழ மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 4ம் இடத்தில் உள்ள டென்மார்க்கில் வருமான வரி 55.9% வரை செல்லும். ஜெர்மனியில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மட்டும் அதிக வரி செலுத்துவது போன்ற சிஸ்டம் அமலில் உள்ளது. இது தவிர 25% வால்யூ ஆடெட் டாக்ஸும் வசூலிக்கப்படுகிறது.
ஜப்பான்: அடுத்த இடத்தில் உள்ளது ஜப்பான். இங்கு அதிகபட்சம் 55.97% வரை வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். ஜப்பான் தலைநகர் டோக்கியோ தான் வரி வசூலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர அங்கு 10% நுகர்வு வரியும் தனியாக வசூலிக்கப்படுகிறது. இதில் 2வது இடத்தில் பின்லாந்து உள்ளது. இங்கு 56.95% வரை வருமான வரியும், 24% வால்யூ ஆடெட் டாக்ஸும் விதிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான நாடுகளில் வரி அதிகம் இருந்தாலும் மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
முதலிடத்தில் சர்ப்ரைஸ்: இந்த லிஸ்டில் முதல் இடத்தில் ஐவரி கோஸ்ட் இருக்கிறது. டாப் இடத்தில் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐவரி கோஸ்ட் இருக்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால், இங்கு ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் சுமார் 60% தொகையை வருமான வரியாகச் செலுத்திவிட வேண்டும். மேற்கு ஆபிரிக்காவின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும் இங்குள்ள பெரும்பாலான மக்கள் மோசமான நிலையிலேயே உள்ளனர்.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மேலும், 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications