Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.12 லட்சத்தை விடுங்க..உலகிலேயே எங்கு வருமான வரி அதிகம் தெரியுமா! 50%க்கு மேல் வரியிலேயே போய்டும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதை மிடில் கிளாஸ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க உலகின் எந்த நாடுகளில் அதிகபட்ச வருமான வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து நமது நாட்டில் புதிய வரி முறையில் இருப்போர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

budget 2025 union budget 2025 income tax 2025

நமது நாட்டில் அதிகபட்ச வருமான வரி ஸ்லாப் 30% ஆக உள்ளது. அதாவது ரூ.24 லட்சத்திற்கு மேல் ஒருவருக்கு வரும் வருமானத்தில் 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும். இது ஒரு பக்கம் இருக்க உலகின் எந்த நாடுகளில் அதிகபட்ச வருமான வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

எங்கே அதிகம்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டில் தான் அதிகபட்ச வருமான வரி விதிக்கப்படுகிறது. அங்கு அதிகபட்சமாக 57.3% வரை வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். எது 57 சதவிகிதம் வரியாகவே செலுத்த வேண்டுமா என நீங்கள் ஷாக் ஆகலாம். ஆனால், வரி எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு அங்கு வாழ்க்கைத் தரமும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் செலுத்தும் அதிக வரிக்கு இணையான பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஜப்பான் நாட்டில் 55.95% வரை தனிநபர் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.. உலகளவில் அதிகபட்ச வருமான வரி கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பானும் இருக்கிறது. ஜப்பானில் அதிக வருமானம் கொண்டவர்களுக்கு அதிக வரி, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்குக் குறைந்த வரி என்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஐரோப்பிய நாடுகள்:

மற்றொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலும் இதேபோல அதிக வருமானத்திற்கு மட்டும் அதிக வரி என்று வசூலிக்கப்படுகிறது. டென்மார்க்கின் தனிநபர் வருமானத்திற்கு 55.9% வரை வரியாக வசூலிக்கப்படுகிறது.

ஆஸ்திரியாவில் அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதம் 55% ஆகும். அதேநேரம் சோஷியல் செக்யூரிட்டி, சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்கள் வருமான வரி மூலமே செயல்படுத்தப்படுகிறது.. இதனால் இங்கும் அதிக வரி என்றாலும் தரமான வாழ்க்கை முறை கிடைக்கிறது. கிட்டதட்ட இதே காரணங்களுக்காகவே மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டில் அதிகபட்சமாக 52.3% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது.

அருபா, பெல்ஜியம்:

தெற்கு கரீபியன் கடலில் உள்ள ஒரு தீவு நாடான அருபா இதில் அடுத்த இடத்தில் வருகிறது. அங்குத் தனிநபர்களுக்கு அதிகபட்சம் 52% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில் ஆறாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் உள்ளது. அங்கு வருமானத்தில் சுமார் 50 சதவிகிதத்தை நாம் வருமான வரியாகச் செலுத்த வேண்டும். அங்கும் பணக்காரர்களிடம் இருந்தே அதிக வரி வசூலிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. வருமான வரி மூலம் அங்குப் பல சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இஸ்ரேல்

சுமார் 90 லட்சம் மக்கள்தொகையுடன் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டில் அதிகபட்சமாக 50% வரை வரி விதிக்கப்படுகிறது. அதேபோல ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா 50% வருமான வரி விதிக்கப்படுகிறது. ஸ்லோவேனியாவில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே வசூலிக்கும் சூழலில், இது ஐரோப்பாவில் உள்ள சின்ன நாடுகளில் ஒன்றாகும்.

10ம் இடம் யாருக்கு:

நெதர்லாந்தில் தனிநபர் வரி வருமானம் சுமார் 46.5% ஆக உள்ளது. நெதர்லாந்து நாட்டை பொறுத்தவரை அங்கு வாழும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும். ஆனால், நெதர்லாந்தில் குடியுரிமை பெறுவோர் அனைத்து தரப்பு வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+