அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள்.. நம்ம சென்னைக்கு 3ம் இடம் தான்! முதல் 2 இடங்கள் யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே நிலையங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நமது தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா ரயில் நிலையம் இரண்டாவது இடத்திலும், சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நமது நாட்டில் பொதுமக்கள் விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து என்றால் அது ரயில் தான். டிக்கெட் விலை குறைவு, டாய்லெட் வசதி, முக்கிய நகரங்களுக்கு இணைப்பு எனப் பல வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகிறார்கள்.

train chennai railway

பயணிகளைக் கவர ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது. இதற்கிடையே 2023 நிதியாண்டில் நமது நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் டாப் நகரங்கள் கொண்ட பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.

டாப் 3 ரயில் நிலையங்கள்: இதில் முதலிடத்தில் உள்ள டெல்லி ரயில் நிலையத்தை ஓராண்டில் 3.9 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். மேலும், அது ரூ.3,337 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியது. இரண்டாம் இடத்தில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தை 6.13 கோடி பேர் பயன்படுத்தி இருந்தாலும் அதன் மூலம் ரூ. 1,692 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை 3.05 கோடி பேர் பயன்படுத்தி இருக்கும் நிலையில், இங்கு வருமானம் ரூ. 1,299 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 3 ரயில் நிலையங்களைத் தொடர்ந்து தெலுங்கானா தலைநகர் உள்ள செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன் 4வது இடத்தில் உள்ளது. 2.77 கோடி பேர் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் நிலையில், இதன் ஆண்டு வருமானம் ரூ.1,276 கோடியாக உள்ளது. டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில்வே ஸ்டேஷன் 1.45 கோடி பயணிகள் மற்றும் ரூ.1,227 கோடி வருவாயுடன் 5வது இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்: தொடர்ந்து மும்பையில் உள்ள லோக்மானயா திலக் ரயில் நிலையம் 1.46 கோடி பயணிகள் மற்றும் ரூ.1,036 கோடி வருவாய், குஜராத்தில் உள்ள அகமதாபாத் 1.8 கோடி பயணிகள் ரூ.1,010 கோடி வருவாய், மும்பை சிஎஸ்டி ரயில்வே நிலையம் 5.1 கோடி பயணிகள் ரூ.982 கோடி வருவாய் உடன் 6 முதல் 8 இடங்களில் உள்ளன.

இவை தவிர மகாராஷ்டிராவில் உள்ள புனே ரயில் நிலையம் 2.2 கோடி பயணிகள் மற்றும் ரூ 976 கோடி வருமானம், டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையம் 1.2 கோடி பயணிகளிடமிருந்து ரூ 844 கோடி வருவாய் பெற்று டாப் 10 இடங்களில் வந்துள்ளன.

மண்டலம் வாரியாக: மண்டலம் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயின் 16 நிலையங்கள் அதிக வருமானம் ஈட்டும் 100 நிலையங்களில் இடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் இருந்து 15 ரயில் நிலையங்களும், மத்திய ரயில்வேயில் இருந்து 11 நிலையங்களும் உள்ளன. அதைத் தொடர்ந்து கிழக்கு மத்திய ரயில்வேயில் இருந்து 9 நிலையங்களும், கிழக்கு ரயில்வேயில் இருந்து 7 நிலையங்களும் இதில் உள்ளன. தொடர்ந்து வடக்கு மத்திய ரயில்வேயில் இருந்து 6 நிலையங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+