Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடையை குறைக்க கஷ்டபடுறீங்களா.. இதை செஞ்சா நிச்சயம் எடை குறையும்.. அடித்து சொல்லும் ஆய்வாளர்கள்

எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்க ஹார்ட் அசோஷியேஷன் வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எடை குறைப்பு என்பது இப்போது பலரும் முயலும் ஒன்றாகவே உள்ளது. இருப்பினும், பலருக்கும் தங்களால் விரும்பிய அளவுக்கு எடையைக் குறைக்க முடிவதில்லை. எடை குறைப்பிற்கு என்ன முக்கியம் என்பது குறித்து அமெரிக்க ஹார்ட் அசோஷியேஷன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளது.

மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக இப்போது பெரும்பாலானோர் அதிக எடையுடன் தான் இருக்கிறார்கள். கூடுதல் எடையுடன் இருப்பதால் மருத்துவ ரீதியாக பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி உள்ளதால் உடல் உழைப்பு இல்லாமல் போக எடை தானாகவே அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பு என்பது ஆண், பெண் என இரு பாலரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவே உள்ளது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

எடை குறைப்பிற்கான பயணம் நீண்ட மற்றும் சிக்கலான ஒன்றாகும்.. நாம் எதிர்பார்த்த அளவுக்கு எடையைக் குறைக்க சில மாதங்கள் வரை ஆகும். சில சமயங்களில் ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம். சிலர் எடையைக் குறைக்கக் கடுமையான டயர்ட்டை பாலோ செய்கிறார்கள். இன்னும் சிலர் ஜிம்மிற்கு சென்று மிகக் கடுமையான உடற்பயிற்சியைச் செய்கிறார்கள். இப்படி தேவைக்கு அதிகமாக இருக்கும் எடையைக் குறைக்கப் பலரும் பல்வேறு வழிகளில் முயன்றே வருகின்றனர். ஆனால், அதில் வெற்றி இலக்கை அடைவது எதோ குறைவான நபர்கள் மட்டுமே..

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஏனென்றால் எடை குறைப்பில் உடற்பயிற்சியைக் காட்டிலும் ​​உணவுப் பழக்கவழக்கங்களுக்கு அதிகம் முன்னுரிமை தர வேண்டும்.. ஆனால் சிலர் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.. அப்படியிருப்பதைக் காட்டிலும் சரியான நேரத்தில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது எடையைக் குறைக்கப் பெரியளவில் உதவும் என்று அமெரிக்க ஹார்ட் அசோஷியேஷன் தெரிவித்துள்ளது. இதில் எடைக் குறைப்பிற்கும் உணவு எடுத்துக் கொள்ளும் நேர இடைவெளிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

உணவு

உணவு

முதல் மற்றும் கடைசி உணவு எப்போது எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு நடத்தினர். 18 வயதுக்கு மேலான சுமார் 550 பேரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்காக மேலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருமே முதலில் உடல் பருமனாகவே இருந்துள்ளனர். அவர்களின் தூக்கம், உணவு, காலை எழும் நேரம் என்று அனைத்தையும் செயலி ஒன்றின் மூலம் கண்காணித்து வந்துள்ளனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களையும் ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர்.

பெரிய உணவுகள்

பெரிய உணவுகள்

இந்த விரிவான ஆய்வில் உணவை நாம் எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் உடல் எடைக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், எந்தளவுக்கு உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக இருந்துள்ளது. அதாவது நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது, தினசரி 1000 கலோரிகள் மேல் உள்ள உணவுகள், 500 முதல் 1000 கலோரிகளுக்குள் இருக்கும் உணவுகள் எடை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

சிறிய உணவுகள்

சிறிய உணவுகள்

மாறாக, 500 கலோரிக்கு கீழ் இருக்கும் சிறிய உணவைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் அது எடை குறைப்பிற்குக் காரணமாக உள்ளது. இதன் மூலம் சீரான இடைவெளியில் குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க எந்தளவுக்கு உதவுவது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தினசரி ஒரு வேளைக்கு அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாகச் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது எடையைக் குறைக்கப் பெரியளவில் உதவியுள்ளது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+