"குறைபாடு கொண்டது.." கொலீஜியம் குறித்து கிரண் ரிஜிஜூ பரபர.. உடனே தலைமை நீதிபதி தந்த "பதில்"

நீதித்துறையில் சுதந்திரத்தைக் காக்க கொலீஜியம் முறை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொலீஜியம் முறையில் நீதிபதி நியமனம் நடைபெற்று வரும் நிலையில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த முறைக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதிலளித்துள்ளார்.

இப்போது நமது நாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் அமைப்பை நீதிபதிகளைப் பரிந்துரைத்து வருகிறது. இவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையிலேயே மத்திய அரசு நீதிபதி நியமனங்களை மேற்கொள்கிறது.

நமது நாட்டில் பல ஆண்டுகளாகவே இந்த முறையில் தான் நீதிபதிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொலீஜியம்

கொலீஜியம்

கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால், இந்த முறைக்குப் பதிலாக நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக பங்கு தேவை என்று மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட கொலீஜியம் பரிந்துரைத்த சில நபர்களை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதனிடையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி

அனைத்து அமைப்புகளும் எந்த தவறும் இல்லாமல் துல்லியமாக இருக்கிறது என்று கூற முடியாது என்றும் இருப்பினும், இதுவே சிறந்த அமைப்பு என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீதித்துறைக்கு வெளியே ஏற்படும் தாக்கங்களிலிருந்து அதைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். மேலும், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

சுதந்திரமாகச் செயல்பட

சுதந்திரமாகச் செயல்பட

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இங்கே இருக்கும் அனைத்து முறைகளும் தவறே இல்லாமல் துல்லியமானது இல்லை. ஆனால் இது (கொலீஜியம்) நாம் உருவாக்கியதிலேயே சிறந்த அமைப்பு. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இது முக்கிய மதிப்பாகும். நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நீதித்துறையை மற்ற தாக்கங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நீதித்துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

அதிருப்தி

அதிருப்தி

கொலீஜியம் பரிந்துரைத்த சில பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இருந்தது. சிலரை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. மத்திய அரசு தெரிவித்திருந்த ஆட்சேபனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்ச நீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அப்போதே இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டிற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று கிரண் ரிஜிஜு கூறியிருந்தார்.

சட்ட அமைச்சர்

சட்ட அமைச்சர்

கிரண் ரிஜிஜு நேற்று இதே நிகழ்விலும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தார். நமது அரசியலமைப்பிற்கு அந்நியமானது என்று குறிப்பிட்ட கிரண் ரிஜிஜு, கொலீஜியம் மூலம் நியமனம் என்பது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என்றும் கொலீஜியம் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகப் பரிந்துரை செய்கிறார்கள் என்றார். மேலும், முன்னாள் நீதிபதிகள் சிலர் நீதித்துறையை அரசுக்கு எதிராக மாற்றியுள்ளதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

தலைமை நீதிபதி பதில்

தலைமை நீதிபதி பதில்

இந்த விவகாரம் குறித்தும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கருத்தியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது.. இத்தகைய வேறுபாடுகளை நான் கையாள வேண்டும். நான் சட்ட அமைச்சருடன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து சட்ட அமைச்சருடன் பிரச்சினைக்கு விரும்பவில்லை.. எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதில் தவறு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

அழுத்தம் இருந்தது இல்லை

அழுத்தம் இருந்தது இல்லை

தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட், வழக்குகளை எப்படி விசாரிப்பு என்பதில் அரசிடம் இருந்து எந்த அழுத்தமும் வந்தது இல்லை என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், "நான் நீதிபதியாக 23 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஒரு வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும் என்று ஒரு முறை கூட யாருமே சொன்னதில்லை. அரசிடம் இருந்து எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்கொண்டது இல்லை. சமீபத்தில் நாங்கள் அளித்த தீர்ப்புகளே இதற்குச் சாட்சி" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+