Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் ஐக்கியமாகும் கமல்நாத்? வந்து விழுந்த கேள்வி.. அதற்கு சட்டென அவரே சொன்ன பரபர பதில்! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து அவரே பதிலளித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் மூத்த தலைவராக இருப்பவர் கமல்நாத். காங்கிரஸ் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த போது, மத்திய அமைச்சராகப் பல துறைகளைக் கவனித்த கமல்நாத், 2018 முதல் 2023 வரை மபி முதல்வராகவும் இருந்துள்ளார்,

What Congress Ex CM Kamal Nath said about speculation of his joining in BJP

காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் இப்போது பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த தகவல் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கமல்நாத்: இதற்கிடையே கமல்நாத் இப்போது டெல்லிக்குச் சென்றுள்ளார். அவர் பாஜகவில் இணையலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து அவரே பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குக் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத் சில வரிகளில் பதிலளித்துவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார்.

என்ன சொன்னார்: கடந்த ஒரு வாரமாகவே கமல்நாத் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் அவர் நேற்று டெல்லிக்கும் வந்திருந்தார். இதற்கிடையே பாஜகவில் இணைய உள்ளதாகப் பரவும் தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல்நாத், "அப்படி ஏதாவது இருந்தால், முதலில் உங்களுக்குத் தான் தெரிவிப்பேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

நீங்கள் இந்த தகவலை மறுப்பதாகச் சொல்லவில்லையே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு கமல்நாத், "இது மறுப்பது பற்றி இல்லை. நீங்கள் தான் இப்படிச் சொல்கிறீர்கள்.. இதனால் உற்சாகமாகவும் இருக்கிறீர்கள். ஆனால், நான் இதில் மகிழ்ச்சியடையவில்லை. இங்கு இருக்கிறேனா.. அங்குச் செல்கிறேனா என எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தான் முதலில் சொல்வேன்" என்றார்.

பிளான் என்ன: கமல்நாத் கடந்த சில நாட்களாகவே தனது கோட்டையான சிந்த்வாரா தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கமல்நாத் இந்தத் தொகுதியில் இருந்து மொத்தம் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் மற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்ற போதிலும், இந்த சிந்தவாரா தொகுதியில் மட்டும் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் வெற்றி பெற்று இருந்தார்.

கமல்நாத் பாஜகவுக்குச் செல்லக் கூடும் என்ற தகவல் பரவி வருவது குறித்து காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்கிடம் கேட்ட போது அவர், "நான் நேற்றிரவு கூட கமல்நாத்திடம் பேசினேன். அப்படி எதுவும் தெரியவில்லை. இந்திரா காந்தியை ஜனதா கட்சி சிறைக்கு அனுப்பியபோது, அரசியலுக்கு வந்த கமல்நாத் எப்போதும் நேரு-காந்தி குடும்பத்துடன் நின்றவர்.. அப்படிப்பட்ட நபர் காங்கிரஸையும் காந்தி குடும்பத்தையும் விட்டு விலகுவார் என்று நினைக்கிறீர்களா?" என்றார்.

என்ன காரணம்: ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்காததால் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வி அடைந்த நிலையில், ராகுல் காந்தியும் கமல்நாத் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மபி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் கமல்நாத் நாத் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+