நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தை குறித்து விமர்சித்த ராகுல்காந்தி.. ஆடிப்போன எம்பிக்கள்
டெல்லி: லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் நடத்தை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து பேசுவதற்கு முன்பு கடவுள் சிவன் படத்தை காட்டினார். தொடர்ந்து அவர் பேசும்போது, "எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்திருக்கிறோம்.

ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் அறிவுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் எதிர்க்கட்சிளாகிய நாங்கள் போராடி வருகிறோம்.
எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன் . எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் நிதர்சனமான உண்மை.
சிவனின் இடதுதோள் ஓரமாக உள்ள திரிசூலம்.. வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம் ஆகும். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டிருக்கிறது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள் ஆகும்.

கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாக தெரிவித்தார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவருடன் உயிருடன் இருக்கிறார்.
இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்" என்று ஆவேசமாக ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார்.
முன்னதாக ராகுல் காந்தி , பாஜகவினரை சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள் என்று பேசிய போதும், பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கூறிய போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டார்கள்.
ராகுல் காந்தி பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று காட்டமாக கூறினார். இதேபபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்திக்கு எழுந்து நின்று கடுமையான பதிலடி கொடுத்தார். அமித் ஷா பேசும் போது, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் நடத்தை குறித்து விமர்சித்தார். சபாநாயகர் என்பது நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த பதவி. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்கும் போது நான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கையில் நிமிர்ந்து நேராக நின்றார். அதேவேளையில், பிரதமர் மோடி கைகுலுக்கியபோது குனிந்து நின்று வணக்கம் செலுத்தினார் என்று விமர்சித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications