டெல்லி தந்த "பிரஷர்".. உடனே பிளைட் ஏறிய எடப்பாடி.. சசிகலா பற்றி அமித் ஷாவிடம் பேச திட்டம்? பின்னணி?
டெல்லி: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அவரின் இந்த பயணத்திற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எதிர்பார்த்தபடியே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 64.03 சதவிகித வாக்குகளை பெற்று திரௌபதி முர்மு தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா 35.97 வாக்குகளை பெற்றுள்ளார். முர்முவிற்கு 2,824 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு 4,83,299 ஆகும். சின்ஹாவிற்கு 1,877 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு 1,89,876 ஆகும்.

குடியரசுத் தலைவர்
டெல்லியில் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடைபெருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் டெல்லி செல்ல இருக்கிறார்கள். டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார். அவரின் இந்த டெல்லி பயணத்திற்கு பின் வேறு காரணங்கள் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரெய்டு
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தற்போது டெல்லி மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் பல்வேறு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர் சந்திரசேகர் வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதேபோல் காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

சிபிஐ
இது போக சி விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இப்படி முன்னாள் அதிமுக அமைச்சர்களை டெல்லி தரப்பு குறி வைத்துள்ள நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது போக வேறு ஒரு முக்கிய காரணமும் இந்த பயணத்திற்கு பின் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலாவை சேர்க்க டெல்லி தரப்பு பிரஷர் கொடுப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒற்றுமை
அதிமுக ஒற்றுமை இருந்தால்தான் அக்கட்சி அதிக இடங்களில் வெல்லும். அப்போதுதான் அவர்களின் கூட்டணியில் இருந்து நாமும் வாக்குகளை வெல்ல முடியும். அதிமுகவின் வாக்குகள் பிரிந்தால் அவர்களின் கூட்டணியில் இருக்கும் நமக்கும் வெற்றி கிடைக்காது என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். முக்கியமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக திரும்பினால், அவருடன் கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு 2024ல் பெரிதாக இடம் கிடைக்காது என்று பாஜக தரப்பு கருதுகிறதாம்.

பாஜக அழுத்தம்
இதன் காரணமாக மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை இணைத்துக்கொண்டு செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வருகிறதாம். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் முன்னேற்பாட்டில் இந்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருக்கிறார் என்கிறார்கள். எடப்பாடி இன்று மோடி, அமித் ஷா ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

வாய்ப்பு
இந்த சந்திப்பில் எடப்பாடி - பாஜக இடையே சமாதானம் ஏற்படும் என்கிறார்கள். அதன்படி.. உங்கள் கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். பாஜகவிற்கு எதுவும் சிக்கல் ஏற்படாது. நம் கூட்டணி உடையாது. ஆனால் ஓபிஎஸ், சசிகலா இருவரையும் கட்சியில் சேர்க்க முடியாது. மற்றபடி பாஜகவுடன் அதிமுக நட்பாக தொடரும் என்று சமாதானம் பேசும் வகையில் எடப்பாடி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாக அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications