டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிரில் கமலாலயம்.. அண்ணாமலைக்கே தெரியாது? ஸ்டாலினுடன் டெல்லி போகும் "அந்த" ஒருவர்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: முதல்வர் ஸ்டாலினின் இன்றைய டெல்லி பயணம் மிகவும் ஆர்ப்பாட்டம் இன்றி சைலண்ட்டாக மேற்கொள்ளப்படுகிறது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பயணமாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வரை இந்த பயணம் திட்டமிடப்படவில்லை. ஆம் திட்டப்படி தமிழ்நாட்டில் நாளை துணை வேந்தர்கள் மாநாடு சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதாக திட்டமிடப்பட்டது.

இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க இருந்த துணை வேந்தர்கள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

வணக்கம் நான் ஸ்டாலின் பேசுறேன்! மின்னகம் சேவை மையத்திற்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய முதல்வர்! வணக்கம் நான் ஸ்டாலின் பேசுறேன்! மின்னகம் சேவை மையத்திற்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய முதல்வர்!

பிளான் என்ன

பிளான் என்ன

இந்த நிலையில்தான் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்திக்கிறார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

எப்போதும் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை அழைத்து செல்வார். அல்லது எம்எல்ஏக்கள், எம்பிக்களை அழைத்து செல்வார். டெல்லியில் ஏற்கனவே இருக்கும் எம்பிக்கள் அவரை வரவேற்க இருப்பார்கள். சென்னையில் இருந்தும் குறைந்தது இரண்டு மூன்று பேரையாவது அழைத்து செல்வார். ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இல்லாமல் டெல்லி செல்கிறார்.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

டெல்லிக்கு இந்த முறை முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே ஒரு நபர் மட்டுமே செல்கிறார். அவர் தலைமை செயலாளர் இறையன்பு. இவர்கள் இருவர் மட்டுமே டெல்லிக்கு செல்கின்றனர். டெல்லியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் முதல்வர் ஸ்டாலினை அங்கு வரவேற்பார்கள். விமான நிலையத்தில் இவர்கள் வரவேற்று பின்னர் தமிழ்நாடு இல்லம் அழைத்து செல்வார்கள். மற்றபடி மிகவும் ஆர்பாட்டம் இன்றி அமைதியாகவே இந்த பயணம் நடக்கிறது.

Recommended Video

    Pakistan போல India மாறாமல் இருக்க இதை செய்ய வேண்டும் - PTR
    அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்த பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல்வர் டெல்லி செல்வது பற்றி தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை. தெரிந்தால் தானே இதை பற்றி சொல்ல முடியும் என்று இவர் பிபிடி தமிழ் ஊடகத்திற்கு தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் பார்க்கக் போகிறார். அப்படி இருந்தும் கூட அந்த பயணம் திட்டம் பற்றி அண்ணாமலைக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    What does only one person accompany TN CM Stalin during his Delhi today? முதல்வர் ஸ்டாலின் இந்த பயணத்தில் என்ன பேசுவார்.. ஏன் இப்படி ஒரு பயணத்தை திடீரென மேற்கொள்கிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதமாக எழுந்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X