இந்தியாவில் அடுத்து 4ஆம் அலை? மீண்டும் உச்சம் தொடும் கொரோனா! ஆய்வாளர்கள் சொல்வது என்ன! ஏன் முக்கியம்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பு திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2020இல் கொரோனா பரவ தொடங்கியது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் மூன்று முறை இதுவரை கொரோனா அலை ஏற்பட்டு, வைரஸ் பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை மிக மோசமாக இருந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடங்கிப் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
கொரோனா வைரஸ்: வேக்சின் பணிகள் தொடங்கி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே கொரோனா பாதிப்பு குறைந்தன. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் மெல்ல நீக்கப்பட்ட நிலையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனிடையே கடந்த சில காலமாக வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த பிப். மாதத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு பல மடங்கு நமது நாட்டில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,357. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 32,814ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கூட தினசரி கொரோனா பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளது. கடந்த மூன்று கொரோனா அலைகள் ஏற்பட்ட பாதிப்பு மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இதனால் இப்போது கொரோனா அதிகரிப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த அலை: கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள போதிலும், இது புதிய அலை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது கொரோனாவின் லேசானது என்றும் இது மிக விரைவில் முடிவடையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், கொரோனா கேஸ்கள் குறையத் தொடங்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இணை நோய் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முந்தைய அலைகளுடன் இந்த கொரோனா அலை எப்படி மாறுபட்டு உள்ளது என்பதை விளக்கும் டாக்டர் ஷுச்சின் பஜாஜ், "3 மாதங்களுக்கு முன்பு வைரஸின் பேட்டர்ன் எப்படி இருந்ததோ.. அதேபோலத் தான் இப்போதும் இருக்கிறது.
ஏன் உயர்கிறது.: அப்போதும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது குறைவதும் இயல்பாகவே இருந்தது. இந்த முறை இன்புளுயன்சா அச்சத்தால், மக்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கொரோனா டெஸ்டிங்கும் செய்யப்படும் நிலையில், அதில் உறுதியாகிறது. இதனால் தான் கொரோனா திடீரென உயர்வது போல இருக்கிறது. இந்த சூழலில் வரும் காலத்தில் நமது நாட்டில் கொரோனா எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்த முறை கொரோனா பரவல் மற்றும் பாசிட்டிவ் கேஸ்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் இது வித்தியாசமாகவே இருக்கிறது. முன்பை காட்டிலும் கொரோனாவை தடுப்பதில் நாம் தயாராகவே இருக்கிறோம். கொரோனாவின் திறன் மாறினால், வேக்சின் தடுப்பு நடவடிக்கையும் அதற்கேற்ப மாற வேண்டும்.
கொரோனா அலைகள்: ஏனென்றால், இந்தியாவிலேயே முதல் அலை ஒரு வேரியண்டாலும் இரண்டாவது அலை மற்றொரு வேரியண்டாலும் ஏற்பட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளும் கூட சற்று மாற்ற வேண்டி இருந்தது. கடந்த அலைகளில் இருந்த மாறுபாடுகளை நாம் உணர வேண்டும். அப்போது தான் அடுத்து ஏற்படும் அலைகளில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முடியும்.
கடந்த கொரோனா அலைகளை வைத்துப் பார்க்கும் போது, கொரோனா வைரஸ் அடுத்த 15 -20 நாட்களில் உச்சம் தொடும். அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைய ஆரம்பிக்கும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அது பரவும் வேகம் அதிகமாக இருப்பது போலத் தெரியவில்லை. கடந்த அலைகளைப் போல வேகமாகப் பரவியிருந்தால், அதன் பாதிப்பு மிக மிக அதிகமாக இருந்திருக்கும்.
அச்சம் வேண்டாம்: இப்போது ஓமிக்ரான் XBB 1.16 காரணமாகவே கொரோனா அதிகரிக்கிறது. ஆனால், இது அடுத்த அலையை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஓமிக்ரான் அலை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். ஆனால், அடுத்து வரும் வேரியண்ட்களும் இப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது" என்றார். கொரோனா அதிகரிப்பதால், நாம் அச்சப்படத் தேவையில்லை என்ற போதிலும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கையைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications