என்ன திமிர்! இந்தியாவில் இருந்துகொண்டே நமது வியாபாரிகளை கெட்ட வார்த்தையில் திட்டிய ஜெர்மன் யூடியூபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், இந்தியச் சாலையோர வியாபாரிகளைக் கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவரை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகச் சுற்றுலாத் துறை இருக்கிறது. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

இப்போது கொரோனா பரவல் மெல்ல முடிவுக்கு வந்துள்ள நிலையில், சுற்றுலாத் துறை மேம்படத் தொடங்கியுள்ளது. உலகெங்கும் மீண்டும் சுற்றுலாத் துறை பிக்கப் ஆகத் தொடங்கியுள்ளது.

சுற்றுலா

சுற்றுலா

இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைப் போலவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம் நாட்டிலும் சுற்றுலாத் துறை மி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இருந்து பல்வேறு மக்களும் இந்தியாவுக்குச் சுற்றுலா வரத் தொடங்கியுள்ளன. இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பலதரப்பட்ட கலாச்சாரம், உணவு உள்ளிட்டவற்றை அவர்கள் ரசித்து வருகின்றனர். குறிப்பாக யுடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வீடியோ வெளியிடுவோரும் இந்தியாவுக்கு அதிகப்படியாகச் சுற்றுலா வருகின்றனர்.

 ஜெர்மனி யூடியூபர்

ஜெர்மனி யூடியூபர்

அப்படி இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள ஜெர்மனி நாட்டை சேர்ந்த யூடியூபர் ஒருவர் செய்த செயல் தான் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த யூடியூபர் கிறிஸ்டியன் பெட்ஸ்மேன். இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள இவர், Airbnbஇல் ரூம் புக் செய்துள்ளார். Airbnb என்பது நமது நாட்டில் ஓயோவை போல இருக்கும் தளமாகும். இவரது ஹோட்டலுக்கு முன்பு, சில சாலையோர வியாபாரிகள் பொருட்களை விற்று வந்ததாகத் தெரிகிறது. அதைத் தான், இணையத்தில் இவர் கெட்ட வார்த்தையில் திட்டி பதிவிட்டுள்ளார்.

 கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

இந்தியாவின் அழகை ரசிக்க வந்த இவர், இந்தியச் சாலையோர வியாபாரிகளைத் திட்டியுள்ளார். தனது ஹோட்டல் ரூமுக்கு வெளியே இந்த சாலையோர வியாபாரிகள் சந்தேகம் எழுப்புவதாகக் கூறி, அவர்களை விமர்சித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதை எப்படி இவர்கள் இன்னும் தடை செய்யவில்லை? தினமும் சுமார் 20 பேர் எனது ஹோட்டலுக்கு முன்பு வந்து அவர்களின் s***ஐ விற்கக் கத்துகிறார்கள். அவர்களின் அனைத்து அன்னாசிப்பழங்களையும் வாங்கி அவனுடைய a**இல் செருக வேண்டும். B****.." என்று திட்டியுள்ளார்.

 சாலையோர வியாபாரிகள்

சாலையோர வியாபாரிகள்

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து வேலை செய்யும் சாலோயைர வியாபாரிகளை இப்படி ஆபாச வார்த்தைகளால் திட்டிய கிறிஸ்டியன் பெட்ஸ்மேனை நெட்டிசன்கள் வைத்துச் செய்துவிட்டனர். நெட்டிசன்கள் இவரைத் தாளித்து எடுக்கவே, தனது தவறை உணர்ந்த கிறிஸ்டியன், தனது இன்ஸ்டாகிராம் பதிவை டெலிட் செய்துவிட்டார். இருந்த போதிலும், இந்தியச் சாலையோர வியாபரிகளை திட்டியது தவறு எனப் பலரும் சாடி வருகின்றனர். மேலும், இதுபோன்ற வியாபாரிகளால் தாங்கள் எந்தளவுக்கு பயன் பெறுகிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் விளக்கி வருகின்றனர்.

 நெட்டிசன்

நெட்டிசன்

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "சாலையோர வியாபாரிகள் இருப்பதால் தான் மாற்றுத் திறனாளிகள், முதியவர்களாலும் நல்ல காய்கறிகளை வாங்க முடிகிறது. கடும் மழை, உச்சி வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். அவர்களைக் கேலி செய்வது மிகவும் எளிதானது ஆனால் அவர்களின் உழைப்பு ரொம்பவே தேவையான ஒன்று.. இங்குப் பலரும் இவர்கள் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். இது எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பகுதி.. ஆனால், அவருக்கு வெறும் இரைச்சல்" என்று சாடியுள்ளார்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

மேலும் மற்றொரு நெட்டிசன், "இந்த நபர் மோசமானவர். சாலையோர வியாபாரிகள் தான் இந்தியாவில் முதுகெலும்புகள். பழைய காய்கறிகளை மிக அதிக விலைக்கு விற்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு பதிலாகத் தினமும் புதியதாகக் கிடைக்கும் பொருட்களை இவர்களிடம் கிடைக்கும்" என்று பதிலளித்துள்ளார். கிறிஸ்டியன் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைச் சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, 2021இல் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் குறித்து இவர் சர்ச்சை கருத்தைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+