Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெறித்தனம்".. பெட்ரூமில் கள்ளக்காதலன்.. திடீர்னு கதவை தட்டும் சத்தம்.. பதறிய சுசீலா.. செம ட்விஸ்ட்

கள்ளக்காதல் ஜோடிக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.. இரவு நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்துவிட்டார் மனைவி.. அப்போது திடீரென கதவை தட்டும் சத்தம்.. என்ன ஆச்சு?

தனி மனித ஒழுக்கம் எப்பொழுது கெட்டு போகிறதோ, அப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள் சூழ்ந்துவிடுகின்றன.. காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், சில சமூக அக்கறையற்ற சக்திகளால் மனித உறவுகள் சீர்குலைக்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது.

அதிலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் எல்லைமீறி போய் கொண்டிருக்கிறது.. அவைகள், மனித உயிர்களை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறது.. சில நேரங்களில் விபரீதமாகியும் விடுகிறது.. அப்படி ஒரு சம்பவம்தான் இது..!

 சம்பவம்

சம்பவம்

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஷிக்கர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் சுகெளலி.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா தேவி.. கல்யாணமாகிவிட்டது.. 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. அந்தப் பெண்ணின் கணவர் மும்பையில் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. வேறு மாநிலத்தில் வேலை பார்த்து வருவதால், சொந்த ஊருக்கு எப்போதாவதுதான் செல்வார்.. தன் குடும்பத்திற்காக, அங்கேயே தங்கி உழைத்து கொண்டிருக்கிறார்..

இளைஞர்

இளைஞர்

எனவே, சுசீலா, தன்னுடைய 3 குழந்தைகளுடன் சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தார்... கணவனை பிரிந்திருந்த சுசீலாவுக்கு, திடீரென கள்ளக்காதல் பற்றிக் கொண்டது.. அந்த இளைஞன் பெயர் வினோத்ராம்.. 26 வயதாகிறது.. லெளகாரியா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.. ஒரு செல்போன் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார் வினோத்.. ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் இருவரும் பழகி வந்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் நெருக்கம் வந்துள்ளது.. 2 பேரும் வீட்டில் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்து வந்துள்ளனர்..

அட்டகாசம்

அட்டகாசம்

அதிலும் இந்த 6 மாதமாக சுசீலாவின் அட்டகாசம் அதிகமாகிவிட்டதாம்.. அடிக்கடி வினோத்தை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.. அப்படித்தான் சம்பவத்தன்று நைட்டும் சுசீலா வீட்டிற்கு வந்துள்ளார்.. 2 பேரும் வழக்கம்போல் கதவை சாத்திக் கொண்டனர்.. இரவு நேரம் என்பதால், வினோத் வந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று கணக்கு போட்டார் சுசீலா.. ஆனால், ஊரே இதை பார்த்து கொண்டிருந்தது.. காரணம், ஏற்கனவே அந்தவீட்டிற்கு வினோத் வந்துபோவது கிராம மக்களுக்கு தெரிந்திருந்தது.. அதனால், கடுப்பில் இருந்தார்கள்.

சுசீலா

சுசீலா

சம்பவத்தன்று இதை கண்ணெதிரே மறுபடியும் பார்த்துவிடவும் கொந்தளித்துவிட்டனர்.. அதற்கேற்றபடி, வெகுநேரமாகியும் கதவும் திறக்கப்படவில்லை. கணவன் வெளியூரில் இருக்கும்போது, இப்படி வேறொரு இளைஞர் வீட்டிற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், சுசீலா வீட்டுக்கு திரண்டு சென்றார்கள்.. கதவை தட்டவும், உள்ளே இருந்த ஜோடி வெலவெலத்து போய்விட்டது.. பிறகு, வேறு வழியில்லாமல் சுசிலா கதவை திறந்து பார்த்தால், ஊரே நின்று கொண்டிருக்கிறது.

 கட்டிவைத்தனர்

கட்டிவைத்தனர்

சுசீலாவையும், வினோத்தையும் தரதரவென இழுத்து வந்த கிராம மக்கள், அங்கிருந்த கரண்ட் கம்பத்தில் 2 பேரையும் கட்டி வைத்து அடித்தனர்.. அவர்களின் கைகளை துணியால் இறுக்கமாக கட்டிப்போட்டனர்.. நைட் முழுக்க அந்த கட்டை அவிழ்க்கவே இல்லை.. பொழுதுவிடியும்வரை, அந்த ஜோடி கரண்ட் கம்பத்திலேயே கட்டிவைக்கப்பட்டனர்.. இத்துடன் விவகாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அப்போதுதான் அந்த விஷயத்துக்கே வந்தனர் கிராம மக்கள்.

 வெளிறிய முகம்

வெளிறிய முகம்

அதிலும் வினோத் முகமே வெளிறிப்போய்விட்டது.. காரணம், அவங்க குடும்பத்தில் எல்லாரையுமே அங்கு வரவழைத்திருந்தனர் கிராம மக்கள்.. வினோத்தை பார்த்து ஆவேசமடைந்த குடும்பத்தினர், அந்த பெண்ணுக்கே வினோத்தை கல்யாணம் செய்து வைக்கும்படி சொன்னார்கள்.. இதையடுத்து, கிராம மக்களும், சுசீலாவுக்கும் வினோத்துக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.. அங்கேயே கரண்ட் கம்பம் அடியிலேயே சுசீலாவுக்கு தாலி கட்டினார் வினோத்.. இத்துடன் விவகாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அப்போதுதான் அந்த மெயின் விஷயத்துக்கே வந்தனர் கிராம மக்கள்.

 தாலி கட்டினார்

தாலி கட்டினார்

தாலி கட்டின கையோடு, உடனே கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த ஊர்மக்கள் சத்தம் போட்டார்கள்.. இந்த ட்விஸ்ட்டை வினோத்தின் குடும்பத்தினரே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ஆனால், ஊரே திரண்டு ஒரு உறுதியாக முடிவெடுத்துள்ளதால், செய்வதறியாது அமைதியாக வெட்கி தலைகுனிந்திருந்தனர்.. பிறகு கள்ளக்காதல் ஜோடி இருவரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்... இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 கதறும் குழந்தைகள்

கதறும் குழந்தைகள்

அதேசமயம், கிராம மக்களே இப்படி ஒரு முடிவை எடுத்தது, அத்துமீறலாகவே கருதப்படுகிறது.. போலீசுக்கு போயிருக்கலாம்? அல்லது இந்த ஜோடியை இவர்களே பிடித்து கொண்டு போய் போலீசில் ஒப்படைத்திருக்கலாம்.. சட்டத்தை இவர்களாகவே கையில் எடுத்துள்ளனர்.. ஆக மொத்தம் இதில், கொடுமை என்னவென்றால், அம்மாவை காணோமே என்று சுசீலாவின் 3 குழந்தைகள் கதறி கொண்டிருக்கின்றன.. இது எதுவுமே தெரியாமல், சுசீலாவின் கணவன் அங்கே வியர்வை சிந்தி உழைத்து கொண்டிருக்கிறார்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+