சித்ரா தற்கொலை செய்தது ஏன்?.. கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?.. வெளியானது ஹேமந்தின் 20 நிமிட ஆடியோ
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பதற்கு முன்னால் நடந்தது என்ன? ஹேமந்தும் அவரது நண்பரும் பேசிய 20 நிமிட ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்தின் நண்பர் ரோஹித் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சையது ரோஹித். இவர் ஹேமந்தின் 10 ஆண்டு கால நண்பராவார். சித்ராவுக்கு நெருங்கிய நண்பர் இவர். சென்னை திநகரில் வாடகை வீட்டில் சித்ரா ஹேமந்த், ரோஹித் அவரது மனைவி ஆகிய 4 பேரும் ஒன்றாக வசித்து வந்தனராம். சித்ராவின் மரணத்திற்கு பிறகு ஹேமந்துடன் பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

20 நிமிட ஆடியோ
அதில் சித்ராவின் மரணத்திற்கு முன்னர் இறுதி நிமிடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஹேமந்த் கூறியிருந்தது பதிவாகியுள்ளது. அது சுமார் 20 நிமிட வீடியோவாகும். அதில் ஹேமந்த் கூறுகையில் என்னிடம் சித்ரா ஆக்டிவ்வாகவே பேசவில்லை. ரொம்ப அமைதியாக இருந்தார். இவரை ஷோவிற்குள் தனியாக விட்டது மட்டும் தவறு என்பது எனக்கு புரிந்தது.

சித்ரா
உடனே நான் சித்ராவிடம் சத்தியம் செய்தது போல் ஷோவில் ஜோடியாக அவனுடன் டான்ஸ் ஆடவில்லைல்ல என கேட்டேன். அதற்கு சித்ரா ஆடினேன் என்றார். நான் ஆடாதேனு தானே சொன்னேன் , ஏன் ஆடினே என கேட்டேன். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. சித்ரா ஒருமாதிரியாகவே இருந்தார். இப்படி போகிறார், அப்படி போகிறார்.

சிகரெட்
உடனே நான் ஹோட்டல் அறைக்கு வெளியே இருந்த புல்வெளியில் சிகரெட் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்போது சித்து வெளியே வா என அழைத்தேன், இதே வரேன் என கூறிவிட்டு சென்ற சித்ரா உடனே கதவை தாழிட்டுக் கொண்டார். நான் கதவுக்கு 2 அடிக்கு பின்னால் இருக்கிறேன். நான் உடனே அய்யோ இவ திருப்பியும் அழ ஆரம்பிப்பாளே, இதை வேறு சமாளிக்கணுமேனு நெனச்சுக்கிட்டே சிகரெட்டை முழுவதும் பிடித்து தூக்கி போட்டேன்.

கண் முன்னாடி தூக்கில் தொங்கிய சித்ரா
அம்மு, தங்கம், பட்டு, சித்து நான் வெளியே நிற்கிறேன், கதவை திறடினு சொல்லி கதவை தட்டினேன். திறக்கவே இல்லை. பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை தட்டினேன், அப்போதும் அவர் திறக்கவே இல்லை. ஏதோ ஹும்ஹும் என சப்தம் மட்டுமே கேட்டது. உடனே ரூம் பாயிடம் போய் பாத்ரூமை லாக் செய்துவிட்டேன் சாவி கொடுங்கள் என கேட்டேன். உடனே ரூம் பாய் கதவை திறக்கிறார், கண் முன்னாடி தூக்கில் தொங்கறாடா பாவி.... இப்படியாக அந்த ஆடியோ பதிவு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications