'சத்தம் பத்தல'.. தயாநிதி மாறன் சொன்னதுதான் மாயம்.. நாடாளுமன்றத்தை அதிர வைத்த திமுக எம்பிக்கள்
டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஒவ்வொருவராக தமிழில் பதவியேற்றனர். மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் பதவியேற்கும் போது கைதட்ட தொடங்கினார்கள் திமுக எம்பிக்கள். அப்போது தயாநிதிமாறன் சத்தம் பத்தல என்றார். இதனால் உடனே அனைவரும் ஓங்கி கைதட்டினர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழநாட்டில் வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி என வரிசையாக எல்லா கட்சி எம்பிக்களும் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவியேற்றனர்.

முதலில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்ற சசிகாந்த் செந்தில், வாழிய வையகம்! வாழ்க தமிழ்! என்று முழக்கமிட்டார். தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
அடுத்ததாக பதவியேற்ற வட சென்னை தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி, தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார். அதன்பின்னர் பதவியேற்ற தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழில் உறுதிமொழி எடுக்க வரும்போது, மூத்த உறுப்பினரான டிஆர்பாலு உள்ளிட்டவர்களை வணங்கினார். பின்னர் உறுதிமொழி எடுத்த தமிழச்சி தங்கப்பாண்டியன், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க தமிழ்நாடு என்று குரல் எழுப்பினார்.
பின்னர் வழக்கமாக எல்லாம் எம்பிக்களும் கை கொடுத்த உடன், சபை முன்னவரிடம் கை கொடுக்க மறந்து வந்துவிட்டார். உடனே திமுக எம்பிக்கள், கைகொடும்மா.. கைகொடுக்காமா வந்துட்டயேமா.. என்று குரல் எழுப்பினார்கள். இதன் பின்னரே தமிழச்சி தங்கப்பாண்டியன் கை கொடுத்துவிட்டு கீழே வந்தார்.

அதன்பின்னர் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், பதவியேற்ற சென்றார். அப்போது திமுக எம்பிக்கள் கை தட்ட தொடங்கினார்கள். அப்போது தயாநிதி மாறன் சத்தம் பத்தல என்று கூறினார். உடனே திமுக காங்கிரஸ் எம்பிக்கள், நாடாளுமன்றமே அதிரும் வகையில் கைதட்டினார்கள்.
அந்த உற்சாகத்துடன் பதவியேற்ற தயாநிதி மாறன் எம்பி, வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications