"100 படத்தை ஒரே நிமிடத்தில் டவுன்லோட் செய்யலாம்!" பிரதமர் சொன்ன 6ஜி தொழில்நுட்பம்! இத்தனை வசதிகளா
டெல்லி: பிரதமர் மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் 6ஜி தொழில்நுட்பம் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். அது என்ன 6ஜி தொழில்நுட்பம் இது எந்தளவுக்கு வலிமையானது என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார்.. அதன் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்பம் சார்ந்து பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக நாடு விரைவில் 6ஜி தொழில்நுட்பத்திற்குத் தயாராகி வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
6ஜி தொழில்நுட்பம்: இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது மட்டுமின்றி, சர்வதேச அளவில் மிகவும் மலிவு விலையில் மொபைல் டேட்டா திட்டங்களையும் இணையச் சேவைகளையும் இந்தியா வழங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 5ஜியில் இருந்து 6ஜிக்கு மாறும் செயல்முறைகள் இப்போது நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உலகின் அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் 5ஜி வேகமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போது நாடு முழுக்க இருக்கும் 22 பிராந்தியங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையைக் கொண்டு வந்துள்ளது. இதற்காக நாடு முழுக்க 5ஜி டவர்களும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோவுக்கு அடுத்து இப்போது ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க 5ஜி சேவையைக் கொண்டு வந்துள்ளது.
அதிவேகத்தில் இணையச் சேவையைத் தரும் இந்த 5ஜி சேவைக்கு நாடு முழுக்க மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் தான் இப்போது 6 ஜிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதென்ன 6ஜி.. இதற்கும் 5ஜிக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.
5ஜி தொழில்நுட்பம்: பெயரில் இருப்பதைப் போலவே 6G என்பது 5G தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமாகும். 5ஜியை காட்டிலும் 6ஜியின் வேகம் 100 மடங்கு வேகமாக இருக்கும். அதாவது 5ஜி தொழில்நுட்பத்தில் நமக்கு ஒரு வினாடிக்கு 10 ஜிகாபிட் வேகத்தில் இணையச் சேவை கிடைக்கும். அதேநேரம்.. அடுத்த 6ஜி தொழில்நுட்பத்தில் நமக்கு 1 டெராபிட் வேகத்தில் இணையச் சேவை கிடைக்கும்.

இந்த 6ஜி தொழில்நுட்பம் நமது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் தொலைதூரத்தில் இருந்தே நம்மால் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த முடியும். தானியங்கி முறையில் செயல்படும் கார்களை உருவாக்க முடியும். எவ்வளவு பெரிய பைலாக இருந்தாலும் நொடிகளில் அதை மாற்ற முடியும். இப்படிப் பல வசதிகள் அதில் கொட்டிக் கிடக்கிறது.
என்ன வித்தியாசம்: 6ஜி என்பது தற்போது நாம் பயன்படுத்தும் 5ஜி தொழில்நுட்பத்தை விடப் பல மடங்கு வேகமானதாகும். 6ஜி தொழில்நுட்பத்தில் நம்மால் 100+ படங்களை வெறும் நிமிடங்களில் டவுன்டலோட் செய்ய முடியும். மேலும், இதன் இணையச் சேவை வேகமாக இருப்பதால் நம்மால் விர்ச்சுவல் ரியாலிட்டியிலும் பல சாதனைகளைச் செய்ய முடியும். இதன் மூலம் எண்ணில் அடங்காத பயன்களை நாம் பெறலாம்.
வேகம் மட்டுமின்றி இதில் பல புதிய வசதிகளும் இருக்கும்.. 5ஜி தொழில்நுட்பம் என்பது நிலத்தில் மட்டுமே செயல்படும். ஆனால், 6ஜி தொழில்நுட்பம் விமானத்திலும் செயல்படும். எனவே, 6ஜி தொழில்நுட்பம் வந்தால் விமானங்களில் கூட ஈஸியாக இணையச் சேவையை நாம் பயன்படுத்தலாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications