Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? எத்தனை ஆண்டுகள் வேலை? எவ்வளவு சம்பளம்? அறிய வேண்டிய டாப் பாயிண்ட்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக்னிபாத் திட்டம் என்றால் என்?, அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் எத்தனை ஆண்டுகள் ராணுவத்தில் பயணியாற்ற முடியும், எவ்வளவு சம்பளம் உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

நமது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தேச பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவு பல இளைஞர்களுக்கும் உள்ளது.

இந்த நிலையில், முப்படைகளில் சேருவதற்கும் புதிய அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது.

What is Agnipath scheme, How many years of work, How much salary, Here are the Top points

சம்பளம் எவ்வளவு? : ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும். 4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும்.

17.5 வயதில் இருந்து 23 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

சம்பளத்தை பொறுத்தவரை முதல் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரமும் கடைசி ஆண்டில் அதாவது 4-வது ஆண்டில் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு சேவா நிதியாக மத்திய அரசு பங்களிப்புடன் பணி நிறைவு செய்யும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 11.7 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வரி எதுவும் பிடித்தம் செய்யப்படாது.

What is Agnipath scheme, How many years of work, How much salary, Here are the Top points

ரூ. 46 லட்சம் வரை வழங்கப்படும்: அத்துடன் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் அக்னி வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.

* ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் நிரப்பபப்டும்.
* அக்னி வீரர்களுக்கு சம்பளமாக ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்கப்படும்.
* அக்னீ வீரர்களாக சிப்பாய் பணியில் சேருவதற்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும்.
* அக்னி வீரர் மரணம் அடைந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். அதோடு அவரது மீதமுள்ள சேவைக்கான சம்பளமும் குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும்.

* அக்னிபாத் வீரரக்ள் பணியின் போது உடல் ஊனம் அடைந்தால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதி வழங்கப்படும்.
* அதோடு அவர்கள் பணி புரிந்து இருக்க வேண்டிய காலத்திற்கான ஊதியமும் கொடுக்கப்படும். உடல் ஊனத்தின் தீவிரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக ரூபாய் 46 லட்சம் வரை வழங்கப்படும்.
* அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறையில் 10 % இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

What is Agnipath scheme, How many years of work, How much salary, Here are the Top points

வெளிநாடுகளில் இந்த திட்டம் உள்ளதா?: இந்தியாவில் அக்னிபாத் திட்டம் கட்டாய ராணுவ சேவை திட்டம் கிடையாது. விருப்பப்படும் இளைஞர்கள் இதில் தகுதியின் அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டு வருகின்றன. இருந்தாலும் அக்னிபாத் திட்டத்தை பிற நாடுகளில் உள்ள கட்டாய ராணுவ சேவையுடன் ஒப்பிட்டு சிலர் கருத்தும் தெரிவித்தனர்.

இஸ்ரேல் நாட்டில் அமலில் இருக்கும் கட்டாய ராணுவ சேவை திட்டத்துடன் அக்னிபாத்தை ஒப்பிட்டு பேச்சு எழுந்தது. இஸ்ரேலை பொறுத்தவரை ராணுவத்தில் சேவை செய்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாக உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படையில் ஆண்கள் மூன்று ஆண்டுகளும் பெண்கள் 2 ஆண்டுகளும் பணியாற்ற வேண்டும்.

இதுபோக வடகொரியா, தென்கொரியா, ரஷ்யா, பிரேசில், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ், தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+