Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill எனப்படும் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் FCRA மசோதா குறித்து விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 25ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவின் நோக்கமே தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்துவது எனச் சொல்கிறது மத்திய அரசு! தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை தேசிய நலன், பொது ஒழுங்கு அல்லது நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகமாக அமையாமல் தடுக்க முயல்வதாக மத்திய அரசு கூறுகிறது..

What is FCRA Amendment Bill 2026 introduced in parliament Key Changes and Why It Has Triggered a Row

நாடாளுமன்றம்

எனினும், இந்த புதிய சட்டம் சிறுபான்மை சமூகத்தினரின், குறிப்பாகக் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் எனப் பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த புதன்கிழமை இந்த மசோதா மீது விவாதம் நடைபெற இருந்தது. இருப்பினும், இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கிறிஸ்துவர்கள் கணிசமாக வசிக்கும் கேரளாவில் 9ம் தேதி தேர்தல் நடக்கும் சூழலில், இதன் காரணமாகவே மசோதா இப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

கேரள தேர்தல் களத்தில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இதற்கு கடும் ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளன. இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த மசோதாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

FCRA சட்டம்

FCRA சட்டம் முதலில் 1976ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் இயற்றப்பட்டது. வெளிநாட்டுச் சக்திகள் இந்தியா தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை என்ற பெயரில் நிதியை அனுப்பி, உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடுகின்றன என்று சொல்லி இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள தனி நபர்களும் சங்கங்களும் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை இந்திய இறையாண்மைக்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாக இருந்தது.

திருத்தங்கள்

2010இல் காங்கிரஸ் ஆட்சியில் FCRA திருத்தப்பட்டு, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து, தேசிய நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. 2010 சட்டத்தின்படி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற அனுமதி பெறுவது கட்டாயமாகும். இவை கலாச்சார, பொருளாதார, கல்வி, சமூக மற்றும் மத நோக்கங்கள் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது சுமார் 16,000 அமைப்புகள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ₹22,000 கோடி நன்கொடையைப் பெறுகின்றன.

2010ஆம் ஆண்டு சட்டம் 2016, 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மூன்று முறை திருத்தப்பட்டது. 2020ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இதில் மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்தது. இதன் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதி மற்றும் அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மத்திய அரசு ஆய்வு செய்ய முடியும்.

புதிய திருத்தம் சொல்வது என்ன!

இந்தச் சூழலில் தான் 2026ல் இப்போது மீண்டும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள சட்டத்தின் பிரிவு 15 ஐ மாற்றியமைக்கிறது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற அனுமதிக்கும் FCRA பதிவு ரத்து செய்யப்படும்போது அதன் சொத்துகள் என்னவாகும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்த நிலையில், அது குறித்த விதிகளே மாற்றப்படுகிறது.

அதன்படி FCRA பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் சொத்துக்களை அரசு அமைக்கும் ஒரு குழு மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் என்பதை மசோதா முன்மொழிகிறது. மேலும், ஒரு பதிவுச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் முடிந்தால், அது ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று மசோதா மேலும் கூறுகிறது. அதாவது புதுப்பிக்க விண்ணப்பிக்காமல் போனால் அல்லது புதுப்பிக்கும் விண்ணப்பம் மறுக்கப்பட்டால் இதுபோல கருதப்படும்.

சர்ச்சைக்குக் காரணம்!

ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் அதற்கான அனுமதியைப் பெறத் தவறினால் மத்திய அரசு அமைக்கும் இந்த குழுவின் வசமே குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் சொத்து அல்லது நிதி நிரந்தரமாக வந்துவிடும். இந்த திருத்தங்களே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இந்த FCRA மசோதா சிறுபான்மையினர் தொண்டு அமைப்புகள் மற்றும் சமூக, கல்வி மற்றும் தொண்டுப் பணிகளுக்கு வெளிநாட்டுப் பங்களிப்புகளைச் சார்ந்துள்ள சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டுடன் தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+