சிங்கப்பூரை அலறவிட்ட FLiRT கொரோனா இந்தியாவிலும் பரவியது! சிக்கலான அறிகுறிகள் இருக்கு- நோட் பண்ணுங்க
டெல்லி: நமது நாட்டில் திடீரென புதிதாக FLiRT என்ற வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.. அது என்ன புதிய FLiRT கொரோனா வகை.. இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு நம்மை வைத்துச் செய்துவிட்டது. அதன் பிறகு கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகிவிட்டது.

கொரோனா வைரஸ்: தடுப்பூசி தொடங்கி பல்வேறு பணிகளால் நாம் கொரோனாவை சமாளித்துவிட்டோம்.. இதற்கிடையே இப்போது சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் பாதிப்பு அதிகரிக்க கொரோனாவின் KP.2 மற்றும் KP.1 முக்கிய காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இந்த கொரோனா வேரியண்டுகள் இப்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் KP.2 வேரியண்ட் 290 பேருக்கும் KP.1 வேரியண்ட் 34 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரண்டுடன் வேறு சில வேரியண்ட்கள் இணைந்து தான் FLiRT கொரோனா வகை எனக் குறிப்பிடப்படுகிறது.
கொரோனா வேரிண்டுகள்: இந்த வேரிண்டுகள் நாட்டில் மீண்டும் கொரோனா பரவலை அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், இந்த FLiRT வேரியண்டுகள் அனைத்தும் JN1இன் துணை வகைகள் என்றும், இந்த வேரியண்டுகள் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த KP.1 வேரியண்ட் மேற்கு வங்கம், கோவா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கண்டறியப்படுகிறது. அதேபோல KP.2 வேரியண்ட் மகாராஷ்டிரா, டெல்லி , கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இந்த கொரோனா வகை அதிகம் கண்டறியப்படுகிறது.
அறிகுறிகள்: இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உங்கள் உடலில் ஏற்படும் சில குறிப்பிட்ட அறிகுறிகளை நீங்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். உதாரணமாகக் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இவை தவிரச் சுவை அல்லது வாசனை இழப்பு ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், குமட்டல் அல்லது வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் முக்கிய அறிகுறியாக உள்ளன.
சிலருக்கு நிமோனியா அல்லது ARDS எனப்படும் கடுமையான சுவாசக் கோளாறு கூட ஏற்படலாம். பொதுவாக வைரஸ் தாக்கிய இரண்டு வாரங்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்.
அசாதாரண அறிகுறிகள்: இந்த பொதுவான அறிகுறிகளை தாண்டி சில அசாதாரண அறிகுறிகளையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பைச் சரியான நேரத்தில் நம்மால் கண்டறிய முடியும்.. சிலருக்குத் தோல் வெடிப்பு ஏற்படும். சிலருக்குக் கால்விரல்கள் சிவப்பு அல்லது ஊதா நிறமாற்றம் அடையும் இது அரிதான கொரோனா அறிகுறி.. இதைப் பலரும் தவறவிடுவார்கள். எனவே, இதிலும் கவனம் தேவை,.
மேலும், கொரோனா பாதிப்பு ஏற்படும் போது சில நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும்.. தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் மயக்கம் ஆகியவை முக்கியமானது.. ஒற்றைத் தலைவலி அரிதான தோல் நோய் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications