Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ககன்யான் திட்டம் என்றால் என்ன.. மற்ற இஸ்ரோ மிஷன்களை விட இது இந்தியாவுக்கு ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்த ககன்யான் திட்டம் என்றால் என்ன.. அது எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த சில காலமாகவே இந்திய விண்வெளி துறையில் நாம் செய்த சாதனைகள் மிக பெரியது. குறைந்த விலையில் பல அதிநவீன ஸ்பேஸ் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளது.

What is Gaganyaan mission that PM Modi has introduces 4 pilots

இதனால் இப்போது உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவிடம் தான் வருகிறார்கள். அந்தளவுக்கு இந்தியா விண்வெளி ஆய்வுத் துறையில் முக்கிய நாடாக உருவெடுத்துவிட்டது.

இஸ்ரோ: இஸ்ரோ அனுப்பி சந்திரயான் 3 விண்கலம் கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் பூமியின் தெற்கு பகுதியில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையையும் சந்திரயான் படைத்தது. இதற்கிடையே அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

இத்திட்டத்திற்குப் பல ஆண்டுகளாக இஸ்ரோ வேலை செய்து வந்த நிலையில், இன்று இத்திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாணடர் சுபான்சு சுக்லா ஆகியோர் விண்வெளிக்குச் செல்ல உள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

ககன்யான்: இஸ்ரோ நிச்சயம் இந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அது சரி இந்த ககன்யான் திட்டம் என்றால் என்ன.. இது ஏன் முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ககன்யான் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்குக் கைவினை அல்லது வாகனம் பொருள். 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த ககன்யான் திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவின் இஸ்ரோ முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டம் வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

இந்த ககன்யான் மிஷன் கீழ் கடந்த 2024-2025 ஆண்டில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். ஏற்கனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் நாசா அல்லது சோவியத் ஒன்றியம் மூலம் சென்றவர்கள். முழுக்க முழுக்க உற்பத்தி இந்தியா உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் இந்தியர்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த மிஷன் கீழ் இந்திய விண்வெளி வீரர்கள் 400 கிமீ தொலைவிலுள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் அங்கே மூன்று நாட்கள் வரை தங்கி இருப்பார்கள். பிறகு மீண்டும் அவர்கள் ராக்கெட் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களை பாதுகாப்பாக இந்தியப் பெருங்கடலில் இறங்க வைப்பதே இஸ்ரோவின் திட்டமாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரோ பல திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், இப்போது ககன்யான் திட்டமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இஸ்ரோவின் நிபுணத்துவம், அனுபவம் ஆகியவை இத்திட்டம் வெற்றியடைய வைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+