ஒன்றல்ல இரண்டல்ல.. பலமுனை தாக்குதல்.. பாகிஸ்தானை மண்டியிட வைக்கும்.. இந்தியாவின் "மல்டி" பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தானை மண்டியிட வைக்கும் அளவிற்கு இந்தியா மல்டி அட்டாக் பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளதாம். அதாவது நேரடியாக ராணுவ தாக்குதல் மட்டுமன்றி பல முனைகளில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக வல்லுனர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ தரப்போடு சேர்த்து ராஜாங்க ரீதியாக அட்டாக், நிர்வாக ரீதியாக அட்டாக், இயற்கை வளங்கள் ரீதியாக அட்டாக் என்று பல முனை தாக்குதல்களை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறதாம். அந்த பல முனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. ராணுவ தாக்குதல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

What is India multi front plan against Pakistan

நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும்.

2. ராஜாங்க ரீதியாக அட்டாக்

ராஜாங்க ரீதியாக பாகிஸ்தானை ஏற்கனவே இந்தியா அடிக்க தொடங்கிட்டது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது.

டெல்லி உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் "தனிநபர் அல்லாதவர்" என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள்உடனே வெளியேற வேண்டும். இதற்கு 1 வாரம் அதிகபட்சம் டைம் தரப்படும். அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

Take a Poll

3. இயற்கை வளங்கள் ரீதியாக அட்டாக்

இயற்கை வளங்கள் ரீதியாகவும் பாகிஸ்தானை இந்தியா அட்டாக் செய்து வருகிறது. உதாரணமாக 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

4. நிர்வாக ரீதியாக அட்டாக்

இனி நிர்வாக ரீதியாக அட்டாக் செய்ய இந்தியா தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது. இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.

போருக்கு தயாராகிறதா இந்தியா?

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின் ஹபீஸ் சயீத் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இருக்கிறது. ஹபீஸ் சயீத் என்ற இந்த ஒற்றை தீவிரவாதி இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதலில்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மும்பை தாக்குதலுக்கு பின்பாக நேரடியாக பொதுமக்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் கடுமையான விவாதங்களை .. மக்கள் இடையே அச்சங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்தே பாகிஸ்தானியர்கள் விசா நீக்கப்பட்டு உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய நடவடிக்கை என்று பார்த்தால் சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது என்ற நடவடிக்கைதான்.

பொதுவாக போர் காலத்தில்தான் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் இப்போது எடுக்கப்பட்டது உள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+