வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்
டெல்லி: ஈரான் குழப்பங்களால் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தேவையான நேரத்தில் சிலிண்டர்களை பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சூழலில் புக்கிங் இல்லாமல்.. காத்திருக்காமல் நேரடியாக கேஸ் சிலிண்டரை பெற முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
மத்திய கிழக்கு போர் காரணமாக கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பாதிப்புகள் கடுமையாக இல்லை என்றாலும் கூட கணிசமான பாதிப்புகளைப் பார்க்க முடிகிறது. எவ்வளவு நாள் கழித்து புக் செய்ய வேண்டும்.. அப்படியே புக் செய்தாலும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது.

கேஸ் வாங்கலாம்
இந்த ஒரு சூழலில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யாமல், காத்திருக்காமல் ஒரு சில நிமிடங்களில் பெற முடிந்தால் எப்படி இருக்கும். இதில் தான் எல்பிஜி ஏடிஎம்கள் இந்தியர்களுக்கு வழங்க முயல்கின்றன. எல்பிஜி ஏடிஎம்கள் என்று அழைக்கப்படும் இவை, சமையல் எரிவாயுவை விரைவாக, தானியங்கி முறையில் நமக்குத் தருகிறது. 24 மணி நேரமும் இது செயல்படும் என்பதால் எப்போது கேஸ் காலியானாலும் ஒரு சில நிமிடங்களில் புதிய சிலிண்டரை பெற முடியும்! இந்த இயந்திரங்கள் கிட்டத்தட்டப் பணத்தை வழங்கும் ஏடிஎம்களைப் போலவே செயல்படுகின்றன.. ஆனால் பணத்திற்குப் பதிலாக சிலிண்டர்களை தருகிறது.
குருகிராமில் பிபிசிஎல் (BPCL) இதை நிறுவியுள்ளது. மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு மத்தியில், கேஸ் விநியோகத்தை நவீனமயமாக்கும் மற்றும் சீரமைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. நேற்று மார்ச் 21ம் தேதி இது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹரியானாவின் குருகிராமில் உள்ள சென்ட்ரல் பார்க் ஃப்ளவர் வேலி என்ற பகுதியில் ஒரு எல்பிஜி ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காலி சிலிண்டரை கொண்டு வந்தால்.. அதற்குப் பதிலாக புதிய சிலிண்டரை ஓரிரு நிமிடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
எல்பிஜி ஏடிஎம்கள்
எல்பிஜி ஏடிஎம்கள் என்பவை முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்குபவை. இதன் மூலம் நாம் கேஸ் காலியானால் புக் செய்து, டெலிவரி வரை காத்திருக்காமல் உடனடியாக புதிய சிலிண்டரை பெற முடியும். காத்திருக்கும் நேரத்தை ஜீரோ ஆக்குவது, 24/7 அணுகல், மனித தேவையைக் குறைப்பது மற்றும் சிலிண்டர் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவையே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.!
எப்படிச் செயல்படும்
இந்த ஏடிஎம்கள் 10 கிலோ சிலிண்டர்களை விநியோகிக்கின்றன. இவை வழக்கமான 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர்களை காட்டிலும் எடை குறைவு என்பதால் கையாளுவதற்கு எளிமையானவை. அதேநேரம் இவை முழு வீச்சில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிடவில்லை. முதற்கட்ட சோதனையிலேயே உள்ளன. தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட சில இடங்களில் இவை நிறுவப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கு வரவேற்பு அதிகரித்தால் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் இந்த சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2 நிமிடம் போதும்
இந்த ஏடிஎமில் நீங்கள் கேஸ் சிலிண்டரை பெறுவது ரொம்பவே ஈஸி. அதிகபட்சமே சுமார் 2-3 நிமிடங்கள் மட்டுமே ஆகும். முதலில், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை இதில் இருக்கும் டிஸ்பிளேவில் பதிவிட வேண்டும். அடுத்து ஓடிபி வரும் அதைப் பதிவிட வேண்டும். பின்னர், உங்களின் காலியான சிலிண்டரை எடை போடும் இயந்திரத்தில் வைக்க வேண்டும். சிஸ்டம் அதை ஸ்கேன் செய்து சரிபார்க்கும். பிறகு காலி சிலிண்டர் உள்ளே போய்விடும். அதன் பிறகு, நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், இன்னொரு இடத்தில் இருந்து புதிய சிலிண்டரை எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான்!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஏடிஎம்களை நிறுவி வருகிறது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு ஏடிஎம் வந்தாச்சு.. இனி 2 நிமிஷத்துல சிலிண்டர்! மக்களுக்கு LPG ATM ஹேப்பி -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications