‛பெருமைமிக்க இந்து’.. பின்னணி அர்த்தம் இதுதான்! கோவிலுக்கு சென்ற ரிஷி சுனக் விளக்கம்! செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛பெருமைமிக்க இந்து' என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடிக்கடி கூறி வருகிறார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த பிறகும் அவர் தன்னை பெருமைமிக்க இந்து என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் தான் அவர் கூறும் ‛பெருமைமிக்க இந்து' என்பதன் பின்னணி அர்த்தம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பில் உள்ள நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், பல்வேறு சர்வேதேச அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 What is meaning of Being a proud Hindu? Britain PM Rishi Sunak explains

இந்த உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டில் உலக பொருளாதார மேம்பாடு, உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா அமைதியை நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமரும், இந்தியாவின் மருமகனுமான ரிஷி சுனக் பங்கேற்றார். அதோடு பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகள் இடையேயான வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையை நடத்தினார். இதையடுத்து அவர் இன்று காலையில் டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோவிலுக்கு ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் சென்றார்.

அங்கு அவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றிவிட்டு கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினார். தீபாராதனை செய்ததோடு, பூக்கள் தூவி சாமி தரிசனம் செய்தார். துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பான போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் பிரிட்டனுக்கான இந்திய தூதரகத்துக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரிஷி சுனக் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த போட்டோ பகிரப்பட்டுள்ளது.

 What is meaning of Being a proud Hindu? Britain PM Rishi Sunak explains

மேலும் ரிஷி சுனக் சாமி தரிசனத்துக்கு பிறகு கூறியதையும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிஷி சுனக், ‛நான் எனது இந்திய வேர்கள் மற்றும் இந்தியாவுடனான எனது தொடர்பை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க இந்துவாக இருப்பதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவுடனும், இந்திய மக்களுடனும் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும் என்பதாகும்'' என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக இருந்தாலும் கூட அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதாவது ரிஷி சுனக்கின் தாத்தாவும், பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் ஆவார்.

ரிஷி சுனக்கும், அக்சதா மூர்த்தியும் அமெரிக்காவில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் 2 பேரும் காதலித்த நிலையில் 2009 ம் ஆண்டில் பெங்களூரில் வைத்து திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ரிஷி சுனக் கடந்த 2015ல் முதல் முதலாக எம்பியானார். அதன்பிறகு அவரது கன்சர்வேட்டிவ் கட்சியில் வேகமாக வளர்ந்தார்.

 What is meaning of Being a proud Hindu? Britain PM Rishi Sunak explains

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ரிஷி சுனக் செயல்பட்டார். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் குளறுபடியால் போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் அடுத்தடுத்து தங்களின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+