சிஏஏ பற்றி வார்த்தை விட்ட அமெரிக்கா.. உடனே பொங்கி எழுந்த ஜெய்சங்கர்! பாயிண்ட் பாயிண்டாக பதிலடி
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தான் நமது நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே சர்வதேச அளவிலும் சில நாடுகள் இந்தச் சட்டம் குறித்து கருத்து கூறி உள்ளனர்,

குறிப்பாக அமெரிக்கா இது குறித்து கருத்து கூறியிருந்தது. இந்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துவது குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக எல்லாம் கூறியிருந்தது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி இருந்தது.
பதிலடி: இதற்கிடையே அமெரிக்காவின் கருத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நமது நாட்டில் நடந்த பிரிவினையையும் இதில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன அவர் பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட மக்களுக்கு வேகமாகக் குடியுரிமை வழங்கும் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய அவரிடம் அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல இந்திய அதிகாரி திட்டமிட்டதாக அமெரிக்கா கூறுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் இங்கே முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த விவகாரம் குறித்துப் பேசும் பலரும் இதை விளக்குவதில்லை.
ஒரே போல இல்லை: அதாவது கனடாவில் தான் அவர்கள் வன்முறை தீவிரவாத கருத்துக்களுக்கும் அவர்கள் வெளிப்படையாகச் செயல்படவும் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவில் அப்படி இருப்பதில்லை. எனவே, அந்த இரு நாடுகளையும் ஒரே போலப் பார்ப்பது சரியானது இல்லை" என்று அவர் தெரிவித்தார். இந்தியா கனடா இடையே உறவு கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சிஏஏ குறித்த அமெரிக்காவின் கருத்துக்குப் பதிலளித்த அவர், "நமது வரலாற்றைப் பற்றி அவர்களுக்குத் தெளிவான புரிதல் இருப்பதில்லை. உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் நடந்தது போன்ற பிரிவினை நடந்ததே இல்லை. அப்படி எதாவது நடந்து இருந்தால் சிஏஏ சட்டம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது அவர்களுக்குப் புரியும்.
சட்டம் என்ன: இதில் இருக்கும் வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் தூக்கித் தூர வைத்துவிட்டு சும்மா இதில் பிரச்சினை பிரச்சினை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. வரலாற்றில் நடந்த அநீதிக்கு மருந்தைத் தர முயல்வதே இந்தச் சட்டமாகும். இது குறித்து யார் வேண்டுமானாலும் எந்த கருத்துகளை வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்தியாவை யாராலும் ஒருபோதும் நிர்ப்பந்திக்க முடியாது.
உலகெங்கும் இதுபோல குறிப்பிட்ட மக்களுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்கப் பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படிப் பல நாடுகள் இனம், நம்பிக்கை, சமூகப் பண்புகளின் அடிப்படையில் விரைவாகக் குடியுரிமை வழங்கும் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. 1947 பிரிவினை இந்தியத் துணைக்கண்டத்தை இரண்டு சுதந்திர நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்தது. அப்போது மிக மோசமான வன்முறைகள் நடந்த நிலையில், பலர் லட்சம் பேர் இடம் பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
என்ன காரணம்: அப்போது இந்த நாட்டின் பதவியில் இருந்தவர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு (இந்துக்கள்) வாக்குறுதி அளித்தது, அதாவது அங்கே எதாவது பிரச்சனை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்றார்கள். இருப்பினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதுவே பிரச்சினைக்குக் காரணம்.
இந்தியா மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் இதுபோல நடந்துள்ளது. உலகப் போர் சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல ஐரோப்பிய நாடுகள் இதுபோல வேகமாக குடியுரிமையை வழங்கி இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications