சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்றால் என்ன? புதிய வரைமுறையை அறிவித்தது மத்திய அரசு
டெல்லி: சிறுகுறு தொழில் நிறுவனங்கள் என்றால் என்ன என்பது குறித்து மத்திய அரசு புதிய வரைமுறையை அறிவித்துள்ளது.
Recommended Video
பொருளாதார சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ 20 லட்சம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்பதை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

அவர் பேசுகையில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டு வரையறையும் மாற்றி அமைக்கப்படும்.
தொழில் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானத்துக்கான (டர்ன்ஓவர்) கூடுதல் விதிகள் அறிமுகப்படுத்தப்படும். உற்பத்தி துறைக்கும் சர்வீஸ் துறைக்குமான வேறுபாடுகள் களையப்படும். தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
அத்துடன் குறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சத்திலிருந்து ரூ 1 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் 5 கோடி வரை இருக்க வேண்டும். சிறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ 10 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ 50 கோடி வரை இருக்க வேண்டும்.
Definition of MSMEs has been revised, investment limit to be revised upwards, additional criteria of turnover also being introduced: Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/BHYcGWD9H2
— ANI (@ANI) May 13, 2020
நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு 10 கோடி ரூபாயிலிருந்து 20 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ 100 கோடி வரை இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது அரசு.
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 3 லட்சம் கோடி கடன் அளிக்கப்படும். வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வசதிக்கு ரூ 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்புகள் வெளியானது.












Click it and Unblock the Notifications