அம்பானி மகனாக பிறந்தாலும்.. ஹேப்பி இல்லையே.. பல ஹெல்த் பிரச்சினைகளை தாண்டி சாதித்த ஆனந்த் அம்பானி!
டெல்லி: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முந்தைய விழாவில் தனது உடல்நிலை குறித்துப் பேசியிருப்பார். அப்படி அவர் சிறு வயதில் இருந்து எதிர்கொண்டு வரும் உடல்நிலை பிரச்சினைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த சில நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆனந்த் அம்பானி தனது உடல்நலம் குறித்தும் சிறு வயது முதலே தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார். அப்போது அதைக் கேட்ட உடைந்து போன முகேஷ் கண்ணீர் விட்டு அழுதார்.
ஆனந்த் அம்பானி: ஆனந்த் அம்பானி அப்படிச் சிறு வயதில் இருந்து என்ன பிரச்சினைகளை எதிர்கொண்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது வாழ்நாள் முழுவதும் பல நோய் மற்றும் உடல்நல சவால்களைச் சந்தித்துள்ளார். இந்த பிரச்சினைகளால் அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.

ஆனந்த் அம்பானிக்குச் சிறு வயதில் இருந்தே அதிகமான ஆஸ்துமா நோய்ப் பாதிப்பு இருக்கிறது. இதனால் சிகிச்சைக்காக நிறைய ஸ்டெராய்டுகளை தர வேண்டி இருந்துள்ளது. பொதுவாகவே ஆஸ்துமா பாதிப்பு கடுமையானதாக இருந்தால் மருத்துவர்கள் ஸ்டெராய்டுகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அது ஆஸ்துமாவை கட்டுப்படுத்த கணிசமாக உதவும்.
கூலிங் கிளாஸ், ரோலிங் சேர்! கெத்து காட்ட முயன்ற அம்பானி! உள்ளே வந்த மனைவி நீட்டா.. கடைசியில் பாருங்க
என்ன காரணம்: ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொண்டாலே தானாகப் பக்க விளைவாக உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமனானதாக மாறும். ஒரு சமயம் அவரது உடல் எடை சுமார் 208 கிலோ வரை இருந்துள்ளது. ஆஸ்துமா பாதிப்பு இருப்பதால் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்தாலே மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் அவரால் அதிகம் உடற்பயிற்சியும் செய்ய முடியாமல் போனது. அதேநேரம் ஸ்டெராய்டு மற்றும் மருந்துகள் அதீத பசியைத் தூண்டியது. இதனால் அவரது உடல் எடை அதிகரித்தது.
அதாவது ஆஸ்துமா பிரச்சினையைச் சரி செய்ய ஸ்டெராய்டுகள் திறம்பட உதவும். ஸ்டெராய்டுகளை நாம் பயன்படுத்தும் போது உடல் எடை அதிகரிக்கும். அந்த உடல் எடையைக் கட்டுப்படுத்த நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியாது. ஏனென்றால் அது ஆஸ்துமா பிரச்சினையை மோசமாக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் இந்த மோசமான சுழற்சி நமது உடல் எடையைக் கடுமையாகப் பாதிக்கும்.

உடல் எடை குறைப்பு: இது சுவாச பாதிப்பு, நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு பல பல சிக்கல்களைத் தருகிறது. இத்தனை சவால்களையும் மீறி ஆனந்த் அம்பானி விடாமுயற்சியுடன் இருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டில் அனைவருமே வியக்கும் வகையில் வெறும் 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தார். இதற்காகக் கடுமையான டயட்டை பின்பற்றிய அவர் தினசரி 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். அவரது இந்த எடை குறைப்பு பயணம் பலரையும் வியக்க வைத்தது.
பலன் இல்லை: அதேநேரம் அவரால் அதை எடையில் நீட்டிக்க முடியவில்லை. ஆஸ்துமா சிகிச்சைக்கு அவர் எடுத்துக் கொள்ளும் ஸ்டெராய்டு மருந்துகளால் எடை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த 2020இல் நடந்த ராதிகா மெர்சென்ட் திருமண விழாவில் அவரது உடல் எடை மீண்டும் அதிகரித்தது. அவருக்கு இருக்கும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளே உடல் எடை மீண்டும் அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது.
ஆனந்த் அம்பானியின் மருத்துவர்: இது குறித்து ஆனந்த் அம்பானியின் மருத்துவர் முஃபசல் லக்டவாலா கூறுகையில், "சிறுவயதிலிருந்தே உடல் பருமன் அவருக்குப் பெரிய பிரச்சினை தான்.. 2 வயதில் ஆனந்துக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடல் எடை அதிகமாகவே இருந்தது. 2016இல் அவர் கடுமையாக முயன்று உடல் எடையைக் குறைத்தார்.
டயட், உடற்பயிற்சி என்று ரொம்பவே கஷ்டப்பட்டார். ஆனால், சீக்கிரம் அவரது உடல் எடை அதிகரித்தது.. மீண்டும் அதே டயட்டை பின்பற்றி உடற்பயிற்சி செய்த போதும் இரண்டாவது முறை அந்த உத்தி பலனளிக்கவில்லை ஒரு முறை உங்கள் உடல் பருமனாகிவிட்டால் மீண்டும் எடையைக் குறைப்பது கடினம்" என்றார்.












Click it and Unblock the Notifications