கூலிங் கிளாஸ், ரோலிங் சேர்! கெத்து காட்ட முயன்ற அம்பானி! உள்ளே வந்த மனைவி நீட்டா.. கடைசியில் பாருங்க
காந்தி நகர்: தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் முகேஷ் அம்பானி டான் போல நடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இருக்கிறது. இந்த ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸின் ஜியோ தான் நமது நாட்டில் மிகப் பெரிய டெலிகாம் புரட்சியை நடத்தியது என்றே சொல்லலாம்.

இதற்கிடையே இப்போது முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணம் நடக்கிறது. அதாவது முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறுகிறது. உலக கோடீஸ்வரர்கள், முக்கிய தலைவர்கள், டாப் பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
முகேஷ் அம்பானி: திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே ஜாம்நகரில் வெகு சிறப்பாக இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி மட்டுமில்லை.. அவரது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் செயல்களும் பலரையும் கவனிக்க வைத்தது.
மேடையில் அவர்கள் ஜோடியாக ஆடிய நடனம் அனைவரையும் வியக்க வைத்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. ஆனால், அவர்களின் ஸ்பெஷ்ல் அத்துடன் நிற்கவில்லை. திடீரென ஒரு குறும்படத்திலும் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள்.
கெத்தாக அம்பானி: இது தொடர்பான வீடியோ திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் அனைவர் முன்னிலையில் திரையிடப்பட்டது. அதில் கூளிங் கிளாஸ் போட்டுக் கொண்டு செம கெத்தாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி... அப்படியே பாலிவுட் படங்களில் வரும் வில்லனை போல இருக்கும் முகேஷ் அம்பானி பிரபல பாலிவுட் திரைப்படமான 'டான்' கேரக்டருக்கு சவால் விடுகிறார். செஸ் போர்ட் முன்னாள் உட்கார்ந்து கொண்டு அவர் வசனம் பேசும் போது தான் திடீர் ட்விஸ்ட் வருகிறது.
அப்போது உள்ளே வரும் நீட்டா அம்பானி, "இந்த டான் மாட்டிக்கொண்டார்.. அதுவும் பேரக்குழந்தைகளின் குட்டி கைகளிடம் மாட்டிக் கொண்டார்.. போங்க.. போய் உங்கள் மகனின் திருமண வேலைய பாருங்க" என்று சொல்லவே.. முகேஷ் அம்பானியும், "யெஸ் பாஸ்" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்கள் வீட்டின் உண்மையான பாஸ் எப்போதும் உங்கள் மனைவி தான் என்பது போல அந்த வீடியோ நிறைவடைகிறது.
டிரெண்டிங் ஜோடி: அம்பானியின் காமெடி பக்கத்தைக் காட்டுவதாக இந்த வீடியோ இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி ஜோடி கிளாசிக் பாடலான "பியார் ஹுவா இக்ரார் ஹுவா" என்ற பாடலுக்கு நடனமாடினர்.. முகேஷ் அம்பானி பாரம்பரிய உடையான குர்தா-பைஜாமாவும், நீட்டா அசத்தலான தங்க நிற சேலையையும் அணிந்திருந்தார். அவர்களின் அட்டகாசமான நடனம் விருந்தினர்களைக் கவர்ந்தது.
அதில் நடனத்தைத் தாண்டி, புதிய குடும்ப உறுப்பினரான ராதிகா மெர்ச்சண்டை வரவேற்கும் வகையில் இருந்தது. ஆனந்த் அம்பானி ராதிகா திருமணத்திற்கு முந்தைய 3 நாள் கொண்டாட்டம் நேற்று முடிந்த நிலையில், அவர்களின் திருமணம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications