Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகையே உலுக்கிய லீக்.. ஐஸ்வர்யா ராயை விடாமல் துரத்தும் பனாமா பேப்பர்ஸ்.. என்ன நடந்தது? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2016ல் உலகையே உலுக்கிய பொருளாதார முறைகேடு தொடர்பான மிகப்பெரிய லீக்ஸ்தான் பனாமா பேப்பர்ஸ். பனாமா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பிரபலங்கள் பல கோடிகளை பதுக்கி இருந்தது தொடர்பான ஆவணங்கள்தான் இந்த பனாமா பேப்பர்ஸ். இதில்தான் இந்தியாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் சிக்கி உள்ளார்!

2016ல் பல்வேறு நாடுகளில் பணம் பதுக்கிய பிரபலங்களில் பெயர்கள் அடங்கிய தொகுப்பு பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. சர்வதேச ஊடகங்கள் மூலம் இந்த பனாமா பேப்பர்ஸ் வெளியிடப்பட்டது.

இந்த முறைகேடு என்பது மிக மிக எளிதானது. நம் நாட்டில் வருமான வரி கட்டாமல் அதை வெளிநாட்டில் பதுக்கி வைப்பதுதான் இந்த முறைகேடு. ஆனால் அவ்வளவு எளிதாக இப்படி வெளிநாடுகளில் பணத்தை பதுக்க முடியாது. இதற்கு என்று சில குறிப்பிட்ட தீவுகள், வரி இல்லாத சொர்க்கபுரிகள் உள்ளன. அங்குதான் பணத்தை மறைத்து வைக்க வேண்டும்.

வரி கட்டாமல் முறைகேடு

வரி கட்டாமல் முறைகேடு

தங்கள் நாடுகளில் வரும் வருமானத்தை மறைத்து, அதற்கு வரி கட்டாமல், அந்த வருமானத்தை பனாமா, சைபரஸ் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதுதான் இந்த பதுக்கல். இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அந்த நாடுகளில் இருக்கும் சில நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு என்று குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை அங்கு இருக்கும் வங்கிகளிலும், நிறுவனங்களிலும், சொத்துக்களிலும் முதலீடாக செய்வார்கள்.

லிஸ்ட்

லிஸ்ட்

இப்படி பனாமாவில் இருக்கும் Mossack Fonseca என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் பிரபலங்கள் முறைகேடாக செய்த முதலீடுகள் 2016ல் வெளிச்சத்திற்கு வந்தது. ரகசியமான நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் மூலம் ஜெர்மன் செய்தி நிறுவனம் Süddeutsche Zeitung இந்த லிஸ்டை வெளியிட்டது. பின்னர் அந்த லிஸ்டை சரி பார்த்து உறுதி செய்த International Consortium of Investigative Journalists (ICIJ) அதை உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களோடு பகிர்ந்தது. இப்படி பனாமாவில் இருக்கும் Mossack Fonseca என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் பிரபலங்கள் முறைகேடாக செய்த முதலீடுகள் 2016ல் வெளிச்சத்திற்கு வந்தது. ரகசியமான நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் மூலம் ஜெர்மன் செய்தி நிறுவனம் Süddeutsche Zeitung இந்த லிஸ்டை வெளியிட்டது. பின்னர் அந்த லிஸ்டை சரி பார்த்து உறுதி செய்த International Consortium of Investigative Journalists (ICIJ) அதை உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களோடு பகிர்ந்தது.

பனாமா பேப்பர்ஸ்

பனாமா பேப்பர்ஸ்

பின்னர் இந்த லிஸ்டை உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் பகிர்ந்தது. மொத்தம் 22 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பதுக்கிய பணம் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 11.5 மில்லியன் கோப்புகள் இந்த லீக்சில் வெளியானது. விக்கி லீக்ஸ், எட்வர்ட் ஸ்னோடன் லீக்ஸ் ஆகியவற்றை விட மிக மிக பெரிய லீக்ஸ் இந்த பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ் ஆகும்.

எவ்வளவு

எவ்வளவு

மொத்தமாக 2.6 டிபி அளவில் இதில் கோப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பனாமாவில் மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட பல நாடுகளில் இந்த பிரபலங்கள் பணம் பதுக்கியது இதில் கண்டுபிடிக்கப்பட்டது. சவுதி அரேபியா சல்மான், விளாடிமிர் புடின், நவாஸ் ஷெரிப்,ஐஸ்வர்யா ராய், அஜய் தேவ்கான், அமிதாப் பச்சன் என்று உலகின் பல முன்னணி பிரபலங்கள் பெயர்கள் இதில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இதன்பின் உலகம் முழுக்க பல நாடுகளில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது. அதன்படி பிரிட்டனில் 253 மில்லியன் டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்சில் 136 மில்லியன் டாலர், ஆஸ்திரேலியாவில் 93 மில்லியன் டாலர், பெர்லினின் 183 மில்லியன் டாலர் வரியாகவும், அபாரதமாகவும் வசூல் செய்யப்பட்டது. இந்தியாவில் 2017ல் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை இதில் வழக்கு பதிவு செய்தது.

வரி வருவாய்

வரி வருவாய்

இதில்தான் ஐஸ்வர்யா ராய் இத்தனை வருடமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை இந்த பனாமா லீக்ஸ்தான் விடமால் துரத்தி வருகிறது. அமலாக்கத்துறை அவருக்கு இப்போது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால் அவர் நேராக ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு கேட்டு இருப்பதால் இந்த முறை விசாரணைக்கு ஆஜராக மாட்டார்.

ஐஸ்வர்யா ராய் பனாமா

ஐஸ்வர்யா ராய் பனாமா

இவரிடம் பனாமா பேப்பர்ஸ் குறித்து விளக்கம் கேட்கவே இந்த சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும் ஐஸ்வர்யா விசாரணைக்கு ஆஜர் ஆக மாட்டார். இதோடு மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை விசாரணையை இவர் புறக்கணித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+