Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சீக்ரெட் லெட்டர்.." கொலைக்கு சில நாட்களுக்கு முன் அதிக்க் அகமது செய்த காரியம்.. பெரிய ட்விஸ்ட்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேச ரவுடி கொலை வழக்கில் இப்போது மிகப் பெரிய திருப்பம் நடந்துள்ளது. கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் சுப்ரீம் கோர்டிற்கு எழுதிய கடிதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை ஒரு காலத்தில் அலறவிட்டு வந்தவர் அத்திக் அகமது. அங்கே பிரபல தாதாவாக இருந்த இவர், அரசியலிலும் குதித்து சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எம்பி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.

 What is the Atiq Ahmeds Secret Letter to Supreme Court, Two Weeks Before Killing

அங்கே நடந்த ஆள் கடத்தல் ஒன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் சிறையில் இருந்து வந்தார்.. மற்றொரு வழக்கில் அவரது சகோதரரும் சமீபத்தில் தான் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொடூர கொலை: இதனிடையே சனிக்கிழமை அத்திக் அகமதையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வெளியே அவர்களைச் செய்தியாளர்கள் சூழ்ந்த நிலையில், கூட்டத்தில் இருந்து வந்த சில துப்பாக்கிகள் அவர்கள் இருவரையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் முதல் குண்டே அத்திக் அகமது தலையில் பாய்ந்தது. சரமாரியாகக் குண்டுகள் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த ரவடி, ஊடகங்கள் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அங்கே உடனடியாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அத்திக் அகமதை கொலை செய்து நிழல் உலகில் பிரபல ரவடியாக வேண்டும் என்றே இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்ட 3 பேர் ஷாக் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர்.

சீக்ரெட் லெட்டர்: இதனிடையே அத்திக் அகமது கொலை வழக்கில் பெரிய திருப்பமாக, அவரது வழக்கறிஞர் கொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அத்திக் அகமது எழுதப்பட்டதாகக் கூறப்படும் 'ரகசியக் கடிதத்தை' வழங்கினார். அத்திக் அகமது அந்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எழுதியுள்ளார். தான் கொலை செய்யப்பட்டால், இந்த கடிதத்தை சுப்ரீம் கோர்டிற்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் குஜராத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சமீபத்தில் தான் பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அவரது வழக்கறிஞர் கூறுகையில், "சிறைக்குள் சில போலீஸ் அதிகாரிகள் தன்னை மிரட்டியதாக அத்திக் என்னிடம் கூறினார். அதிகாரிகள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. இது குறித்த அனைத்து விவரங்களும் இந்த கடிதத்தில் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

கொலை பண்ணிடுவாங்க: அவர் முதலில் குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் 26ஆம் தேதி, சிறையில் இருந்து வெளியே வந்த போது, தன்னை கொலை செய்யத் திட்டமிடுவதாக அவர் ஊடகத்தைப் பார்த்துக் கத்தியிருந்தார். மேலும், உத்தரப் பிரதேசத்தில் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் அங்கே விசாரணைக்குச் செல்ல தேவையில்லை என்று உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திலும் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்..

தொடர்ந்து இப்படி அவர் கூறி வந்த நிலையில், தான் அவர் இப்போது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை கொலையாளிகள் மூன்று பேரும் 18 முதல் 23 வயதானவர்கள் தான். அவர்களில் இருவருக்குக் குற்றப் பின்னணி இருக்கும் நிலையில், மற்றொருவருக்குக் குற்றப் பின்னணி எதுவும் இல்லை. அவர்கள் பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா என்பதைக் கண்டறிய போலீசார் இப்போது விசாரணை செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+