"லாஜிக்கே இல்லை.." காங்கிரஸ் கோட்டை விடுவது இங்கேதான்! ராகுலை விளாசிய பிரசாந்த் கிஷோர்! என்ன மேட்டர்
டெல்லி: லோக்பசா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் லோக்சபா தேர்தலுக்கு சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் சார்ந்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே காங்கிரஸ் செய்யும் தவறுகள் என்ன என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் பெரும்பாலான வாய்ப்புகளை அவர்கள் தவறவிட்டனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கொரோனா காலத்தில் அரசு மீது மக்கள் மதிப்பு மிகக் குறைவாக இருந்தன, ஆனால் எதிர்க்கட்சிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள எதுவும் செய்யவில்லை. அரசியலும் கிரிக்கெட்டைப் போல் தான்.. கேட்சுகளை கைவிட்டால் போட்டிகளை இழக்க நேரிடும்.
பாஜகவின் சித்தாந்தங்களில் முழுமையாக எதிர்ப்பவர்களைக் கொண்டு தான் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக அவர்களால் தீர்க்கமாகப் போராட முடியும்.. பொதுமக்களில் 60% பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. எனவே, அந்த 60% குறிவைத்து பிரச்சார யுக்திகளை அமைக்க வேண்டும்.
சீரியஸாக இல்லை: இந்தியா கூட்டணி கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் சந்தித்தார்கள். ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளாக மட்டுமே பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஒருபோதும் மக்களைச் சந்திக்கவே இல்லை. ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டு இருந்தால்.. இங்கே மக்களைச் சந்திப்பது யார்.. எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்ப்பதில் சீரியஸாக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நிதிஷ்குமார் பாஜக உடன் கை கோர்த்தால் பாஜகவுக்கு வாக்குகள் அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் ஏற்கனவே பல முறை கூட்டணியை மாற்றிவிட்டார். எனவே, மக்களுக்கே அவர் மீது நம்பிக்கை இல்லை. பாஜகவுக்கும் இது தெரியும்.. இந்தியா கூட்டணிக்கு உளவியல் ரீதியாகத் தாக்குதலைத் தர வேண்டும் என்பதற்காகவே பாஜக மீண்டும் நிதிஷ்குமாரைக் கூட்டணிக்குள் சேர்த்துள்ளது.
காங்கிரஸ் கோட்டைவிடுவது இங்கு தான்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆதார் அவர்களின் திட்டம்.. ஆனால் பாஜகவால் செய்ய முடிந்த அளவுக்கு ஆதாரை வைத்து காங்கிரஸ் கட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது, ஆதார் எங்கள் திட்டம் என்று காங்கிரஸ் கூறுவது அர்த்தமற்றது, ஏனெனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்தார்கள். அதைத் தீர்க்கமாக இறங்கிச் செய்தும் முடித்தார்கள்.
காங்கிரஸ் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள் தங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். மேலும், அரசியல் என்பது பங்குச் சந்தை போன்றது. ஒரு இலக்கில் இருந்து மற்றொரு இலக்கை நோக்கிக் குதித்துக்கொண்டே இருக்க முடியாது. நீண்ட கால நோக்கில் பிளான் செய்ய வேண்டும்.. இன்று ரஃபேல், நாளை இந்துத்துவா என்று மாற்றி மாற்றிப் பேசினால் வேலை செய்யாது.. ஒரே விஷயத்தைக் கையில் எடுக்க வேண்டும். அந்த செய்தி நாட்டின் அனைத்து மக்களிடமும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
லாஜிக்கே இல்லை: மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் இந்த நேரத்தில் மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்வதில் எந்த லாஜிக்கும் தெரியவில்லை. அரசியல் எங்கு நடக்கிறதோ.. அங்கு ராகுல் காந்தி இருக்க வேண்டிய நேரத்தில், அவர் வடகிழக்கில் யாத்திரை செய்வதில் மும்முரமாக இருக்கிறார். மக்களைச் சென்று சந்திப்பது நல்லதுதான்.. ஆனால், இந்த நேரத்தில் தலைமையை விட்டுவிட்டுப் போவது நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல. இந்த விவகாரங்களில் அவருக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications