ஹிஜாப் தடையை நீக்கிய நீதிபதி துலியா யார்? தீர்ப்பு வந்த மறுநொடியே! கூகுளில் ஜாதியை தேடிய நெட்டிசன்ஸ்
டெல்லி: ஹிஜாப் தடையை நீக்கிய நீதிபதி சுதான்ஷு துலியா குறித்து இன்று இணையத்தில் பலரும் தேடி உள்ளனர்.
ஹிஜாப் வழக்கு கடந்த சில வாரங்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துலியாஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாழங்கப்பட்டது.

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்துள்ளார்.
கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் ஹிஜாப் தடையை நீக்கிய நீதிபதி சுதான்ஷு துலியா குறித்து இன்று இணையத்தில் பலரும் தேடி உள்ளனர். தீர்ப்பு வந்த பின் தொடர்ந்து நீதிபதி சுதான்ஷு துலியா குறித்துதான் நெட்டிசன்கள் அதிகம் சர்ச் செய்துள்ளனர். இதனால் கூகுள் டிரெண்டில் அவரின் பெயரும் இடம்பெற்று உள்ளது. இந்த தேடுதலில்தான் சில சுவாரசியமான விஷயங்கள் இடம்பெற்று உள்ளன.

அதன்படி பெரும்பாலான நபர்கள் நீதிபதி சுதான்ஷு துலியாவின் சாதி என்ன என்று தேடி உள்ளனர். முதல் 5 சர்ச்சுகளில் ஒன்றாக அவரின் ஜாதி குறித்த தேடல் இடம்பெற்று உள்ளது. இவை அனைத்தும் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் நடத்தப்பட்ட தேடுதல்கள் ஆகும். அதோடு நிற்காமல் சிலர் மறைமுகமாக வேறு வகைகளிலும் அவரின் ஜாதி பற்றி தேடி உள்ளனர்.
அதாவது துலியாவின் கடைசி பெயர் என்ன என்று சிலர் தேடி உள்ளனர். சிலர் நீதிபதி துலியாவின் சர் நேம் என்ன என்று சர்ச் செய்துள்ளனர். இதன் காரணமாக கூகுள் சர்ச்சில் தானாக ஜாதி ஒரு பாயிண்டாக இடம் பிடித்து உள்ளது.
அதாவது நீதிபதி துலியாவிற்கு சம்பத்தப்பட்ட டேக்குகளில் ஜாதியும் ஒரு கீ வேர்டாக தானாக சேர்ந்து உள்ளது. காரணம் நெட்டிசன்கள் பலர் ஜாதி பற்றி தேடி உள்ளனர். ஒரு நீதிபதி ஹிஜாப் தடையை எதிர்த்ததும் உடனே அவரின் ஜாதியை நெட்டிசன்கள் பலர் இப்படி தேடியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
ஹிஜாப் தடை செல்லாது உச்ச நீதிமன்றம் நீதிபதி சுஷாந்து துலியா தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த தீர்ப்பில் அவர் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ஹிஜாப் என்பது தனிப்பட்ட தேர்வு. வேறு ஒன்றும் இல்லை. கர்நாடக ஹைகோர்ட் தவறான வழியில் சென்றுவிட்டது, பெண்கள் பலர் வீட்டு வேலை பார்த்துவிட்டு, அதன்பின் கஷ்டப்பட்டு பள்ளிகளுக்கும் செல்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை இந்த தடை மூலம் நாம் முன்னேற்ற போகிறோமா? அதனால் நான் என்னுடைய தீர்ப்பில் அதை எதிர்த்து இருக்கிறேன்.

நான் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உள்ளேன். ஹிஜாப் மீதான தடையை நீக்கி உள்ளேன். என்னுடைய மனதில் இருந்த கேள்விகள் எல்லாமே.. ஹிஜாப் தடை காரணமாக மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்று மட்டுமே நான் நினைத்தேன்.












Click it and Unblock the Notifications