"இந்தி பெல்ட்" ஜகா வாங்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்? லிஸ்ட் பெரிசா போகுதே! பாஜகவை சமாளிக்க முடியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.

லோ்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முறை தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.

What is the congress plan for Hindi belt in lok sabha election 2024

இந்தத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். மொத்தம் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல்: இதற்கிடையே வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் புகிய திட்டத்தைக் கையில் எடுக்க உள்ளதாம். அதாவது பொதுவாகக் காங்கிரஸ் கட்சியில் அதிகம் மூத்த தலைவர்களுக்கே வாய்ப்பை தருவார்கள். இதனால் கட்சியின் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், இந்த முறை சீனியர் லீடர்கள் பலரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.

நேற்று திங்களன்று, காங்கிரஸின் மத்திய தேர்தல் குழு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அதன் இரண்டாவது கூட்டத்தை நடத்தியது. அதில் குஜராத் (14), ராஜஸ்தான் (13), மத்தியப் பிரதேசம் (16), அசாம் (14), உத்தரகண்ட் (5) ஆகிய மாநிலங்களில் இருக்கும் மொத்தம் 62 தொகுதிகள் குறித்த விவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலருக்கும் வியப்பைத் தரும் வகையிலான பல செய்திகள் இடம்பெற்றுள்ளது.

சீனியர் லீடர்கள்: அதாவது காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், கமல்நாத், திக்விஜய் சிங், ஹரீஷ் ராவத், சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் இதில் இடம்பெறவில்லையாம். இந்த மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை, அதற்குப் பதிலாக மற்ற இளம் தலைவர்களின் பெயர்களை முன்மொழிந்தனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் அவருக்குப் பதிலாகத் தனது மகன் வைபவ் பெயரை முன்மொழிந்துள்ளார். வைபவ் பெயரைக் காங்கிரஸ் மத்திய குழு ஒப்புதல் கொடுத்துவிட்டதாம். கெலாட்டின் சொந்த தொகுதியான ஜோத்பூர் குறித்து இதில் விவாதிக்கப்படவில்லை.

திடீர் முடிவு: அதேபோல மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும், சிந்த்வாரா தொகுதியின் சிட்டிங் எம்.பி.யுமான நகுல்நாத் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், உடல்நலக்குறைவு காரணமாக ஹரித்வாரில் போட்டியிட விரும்பவில்லையாம். அவருக்குப் பதிலாகத் தனது மகன் வீரேந்திர ராவத்துக்கு சீட் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சச்சின் பைலட் லோக்சபா தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, ராஜஸ்தானில் நான்கு லோக்சபா தொகுதிகளில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். மேலும், சத்தீஸ்கரில் காங்கிரஸின் ஒட்டுமொத்த வலிமையை மேம்படுத்த பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி இறுதியாக இறுதியாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த முறை வெல்ல வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் முதலில் கவனம் செலுத்தக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+