இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் மரணம் அடைய கொரோனா தடுப்பூசி காரணமல்ல.. ஆதாரத்துடன் கூறும் ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில் ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கும் கொரோனா வேக்சின்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து நடத்தப்பட்டு ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளும் கொரோனா காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. அனைத்து நாடுகளிலும் கொரோனாவால் உயிரிழப்புகளும் கூட அதிகமாகவே இருந்தது.

அந்த நேரத்தில் நம்மைக் காப்பாற்றியது என்னவோ கொரோனா வேக்சின்தான். விரைவாக அனைத்து நாடுகளிலும் கொரோனா வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு சீக்கிரம் கட்டுக்குள் வந்தது.
கொரோனா மரணங்கள்: அதேநேரம் சமீப காலங்களாகவே பொதுமக்களிடையே, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. இதற்குப் பலரும் கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அப்போது மத்திய அரசு இது குறித்து எந்தவொரு தரவும் இல்லை என்று கூறியிருந்தது. அதேநேரம் ஐசிஎம்ஆர் இது குறித்து ஆய்வை நடத்துவதாக அறிவித்தது.
இதற்கிடையே தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள மரணங்களுக்கும் கொரோனா வேக்சினுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் என்பவை இளைஞர்களிடையே திடீர் மரணங்களின் அபாயத்தை அதிகரிக்காது என்று ஐசிஎம்ஆரின் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் இளைஞர்கள் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போட்டால் திடீர் மரணங்கள் குறைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வேக்சின்: கடந்த 2021 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நாடு முழுக்க 47 மருத்துவமனைகளில் 18-45 வயதானோர் மத்தியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 729 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சில முக்கிய முடிவுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா இரண்டு டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட இளைஞர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படுவது வெகுவாக குறைந்துள்ளது. ஒரு டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கும் இது ஓரளவுக்குப் பாதுகாப்பைக் கொடுத்துள்ளதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்தும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா பாதிப்பு, ஏற்கனவே குடும்பத்தில் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இப்படி உயிரிழந்தோரில் பலரும் இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மதுவால் ஏற்படும் பாதிப்பு, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவையும் இந்த திடீர் மரணங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
மன்சுக் மாண்டவியா: இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், "ஐசிஎம்ஆர் இது குறித்து விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் கடுமையான கொரோனா பாதிப்பால் கடந்த காலங்களில் அவதிப்பட்டோருக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போது குஜராத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களுக்கு இதுவே காரணமாகும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் திடீர் மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், பலரும் இதற்கு கொரோனா வேக்சின்களே காரணம் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த இரண்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது இந்த ஆய்வில் உறுதியாகியுள்ளது. மற்ற உடல்நிலை சிக்கலும், வாழ்க்கை முறைகளுமே இதுபோன்ற உயிரிழப்பிற்குக் காரணம் என்று இந்த ஐசிஎம்ஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications