“இத்தனை கோடியா”.. பிரதமர் மோடியின் 100 வது மன் கி பாத்! இத்தனை ஆண்டுகளில் வரவு, செலவு இவ்வளவா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் பேசி வரும் மான் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 வது எபிசோட் இன்று ஒலிபரப்பாக இருக்கும் நிலையில், இதன் ஒரு நாள் எபிசோடை ஒளிபரப்பு செய்வதற்கு ஆகும் செலவு என்ன? இதுவரை ஒளிபரப்பான எபிசோடுகளுக்கு செலவு செய்த தொகை என்ன? விரிவாக பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் பிரதமராக முதல்முறை பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக மக்களுடன் வானொலி வாயிலாக மன் கி பாத் எனப்படும் மனதில் குரலில் பேசி வருகிறார். இதன் முதல் ஒளிபரப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது தொடங்கியது. முதல் நிகழ்ச்சியை 66.7 சதவீதம் பேர் கேட்டனர்.

அன்றில் இருந்து வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிறு அன்று பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் வானொலி வாயிலாக பேசி வருகிறார். அதில் பலரால் கவனிக்கப்படாத மக்கள் சேவகர்கள், சாதனையாளர்களை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரையும் அடையாளப்படுத்தி உள்ளார். அத்துடன் மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவுறுத்தல்களையும், நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி உள்ளதுடன், திருக்குறள் போன்ற பல தமிழ் இலக்கியங்களையும் மேற்கோள் காட்டி உள்ளார்.
வானொலி மட்டுமல்லாமல் யூடியூப் சேனலிலும் இந்த மன் கி பாத் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தூர்தர்ஷனின் அனைத்து மொழி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் மோடி தெரிவிக்கும் கருத்துக்கள் எந்த நாள் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. மறுநாள் நாளிதழின் முதல் பக்கத்திலும் அது இடம்பிடிக்கிறது.
இன்று மன் கி பாத்தின் 100 வது எபிசோட் ஐநா சபையிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான செலவு குறித்து ஆராய்ந்தோம். அதில் இந்த மன் கி பாத் உரை தயாரிப்பு, பதிவுக்கான செலவுகள் குறித்து போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. அதே நேரம் இதற்கான ஓளிபரப்பு மற்றும் விளம்பர வரவு செலவுகள் குறித்த விபரங்கள் கிடைத்து உள்ளன.
இந்த மன் கி பாத் உரையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு கீழ் வரும் ஆல் இந்தியா ரேடியோ FM இல் வாரந்தோறும் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் 10 வினாடி விளம்பரத்துக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. அதே நேரம் மன் கி பாத் நிகழ்ச்சியின்போது 10 வினாடி விளம்பரத்துக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 100 எபிசோடுகளுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஆல் இந்தியா ரேடியோ பெற்று உள்ளது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கும் மன் கி பாத் மூலமாக கோடிக்கணக்கில் விளம்பர வருவாய் கிடைத்து இருக்கும். அதே நேரம் மன் கி பாத் நிகழ்ச்சியை விளம்பரம் செய்வதற்காக மத்திய அரசு இத்தனை ஆண்டுகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளது.
தற்போது செய்தித்தாள் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.1 முதல் ரூ.1.5 கோடி செலவளித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தொலைக்காட்சி, இணைய விளம்பரங்கள், பேனர்கள் போன்றவற்றுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த செலவுகளை சமாளிப்பதற்கான வருவாயும் விளம்பரங்களின் வாயிலாக கிடைத்துவிடும்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications