ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! "மோடி சாதி.." சர்ச்சை கருத்து! சூரத்தில் நடந்த அவதூறு வழக்கு என்ன
டெல்லி: மோடி குறித்து சர்ச்சை கருத்து பற்றிய கிரிமினல் அவதூறு வழக்கில் நீதிமன்றம், ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணியை பார்க்கலாம்.
ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை பார்க்கலாம்.

காங்கிரஸ்
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.

பிரசாரம்
அப்படித்தான் ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் முந்தைய புபேந்திர பால் அரசில் அமைச்சராக இருந்தவர்

தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications